LIK Box Office: எல்ஐகே முதல் நாள் வசூல்… கெத்து காட்டிய பிரதீப்

 
LIK Box Office: எல்ஐகே முதல் நாள் வசூல்… கெத்து காட்டிய பிரதீப்

பிரதீப் ரங்கநாதன் நடிப்பில் நெற்று வெளியான படம் எல்ஐகே. கீர்த்தி ஷெட்டி நாயகியாக நடித்துள்ள இந்த படத்தை விக்னேஷ் சிவன் இயக்கியுள்ளார். அனிருத் இசையமைப்பில் உருவாகியுள்ள இப்படத்தில் சீமான், எஸ்.ஜே.சூர்யா, யோகிபாபு உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். தொடர்ந்து தொல்வி படங்களை கொடுத்துவந்த விக்னேஷ் சிவன் இப்படதை மிகவும் எதிர்பார்த்தார். அதிலும் தொடர்ந்து 100 கோடி வசூல் படங்களை கொத்து வரும் பிரதீப் ஹீரோ என்றதும் படத்தின் மீதான எதிர்பார்ப்பு இன்னும் அதிகரித்தது.

கடந்த ஆண்டே வெளியாகவேண்டிய இப்படம் சில காரணங்களால் தொடர்ந்து தள்ளிகொண்டே சென்றது. இந்த நிலையில் நேற்று இப்படம் ஒரு வழியாக ரிலீஸ் செய்யப்பட்டது. கலைவயான விமர்சனங்களையே பெற்று வரும் எல்ஐகே படத்தின் முதல் நாள் வசூல் குறித்த தகவலை sacnilk இணையதளம் வெளியிட்டுள்ளது.

அதன்படி இந்திய் அளவில் முதல் நாள் நடைபெற்ற 3,202 காட்சிகளில் மொத்த வசூல் ரூ. 7.93 கோடியை பெற்றுள்ளது. உலகளவில் ரூ. 9.93 கோடியாக அதாவது ரூ 2 கோடி வசூலித்துள்ளது. பிரதீப் ரங்கநாதனின் முந்தைய படங்களை ஒப்பிடுகையில் இப்படத்தின் வசூல் சற்று குறைவுதான். ஆனாலும் வரும் நாட்களில் வசூல் அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

From Around the web