LIK: விக்னேஷ்சிவன் இயக்கத்தில் பிரதீப் ரங்கநாதன் நடிப்பில் தயாராகி இருக்கும் திரைப்படம் எல்ஐகே படத்தின் டீசர் இன்று வெளியாகி பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருக்கிறது. படத்தில் ரசிகர்கள் ரசிக்கும் படியான பல காட்சிகள் இடம் பெற்று இருக்கின்றன. சயின்ஸ் ஃபிக்சனை மையப்படுத்தி இந்த படம் உருவாகி இருக்கிறது. இந்த வருடம் தீபாவளி ரிலீஸாக எல்ஐகே திரைப்படம் இருக்கும் என அதிகாரப்பூர்வமாக அறிவித்து இருக்கிறார்கள். அதே நேரம் பிரதீப் ரங்கநாதன் நடிப்பில் மற்றொரு திரைப்படமான ட்யூட் திரைப்படமும் இந்த வருட தீபாவளிக்கு ரிலீசாக இருக்கின்றது.
அந்தப் படத்தை கீர்த்தீஸ்வரன் இயக்கியிருக்கிறார். இந்த நிலையில் தான் எல்ஐகே படத்தின் டீசர் வெளியாகி இருக்கிறது. இந்த படத்தை 7 ஸ்கிரீன் ஸ்டுடியோ நிறுவனம் தயாரித்திருக்கிறது. இவர்களுடன் விக்னேஷ் சிவன் மற்றும் நயன்தாரா இணைந்து நடத்திவரும் ரவுடி பிக்சர்ஸ் நிறுவனமும் சேர்ந்து தயாரித்திருக்கிறார்கள். படத்திற்கு அனிருத் இசையமைத்திருக்கிறார்.
படத்தில் பிரதீப் ரங்கநாதனுக்கு ஜோடியாக கீர்த்தி செட்டி நடித்திருக்கிறார். எஸ் ஜே சூர்யா, சீமான், யோகி பாபு, ஆனந்தராஜ் என பலர் இந்த படத்தில் நடித்துள்ளனர். ஏற்கனவே இந்த படத்தின் பாடல் வெளியாகி ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றது. இப்போது டீசரும் வெளியாகி பெரிய அளவில் ஹைப்பை ஏற்படுத்தி இருக்கிறது. 2040இல் நம்முடைய தமிழ்நாடு எப்படி இருக்கும் என இந்த படத்தில் காட்டி இருக்கிறார்கள் .பிரதீப் ரங்கநாதன் படம் என்றாலே அதில் ஒரு சுவாரஸ்யம் இருக்கும். அவர் இயக்கிய கோமாளி திரைப்படம் பெரிய அளவில் வெற்றியடைந்தது .
yash
அதன் பிறகு அவர் நடித்த லவ் டுடே திரைப்படத்தில் காதலர்கள் இருவரும் தன்னுடைய மொபைல் போனை மாட்டிக்கொள்ளும் பட்சத்தில் ஏற்படும் பிரச்சனைகளை விளக்குவதாக அந்த படம் அமைந்தது. அதற்கடுத்தபடியாக டிராகன் திரைப்படம் ஒரு வித்தியாசமான கதைக்களமாக இருந்தது. அவர் நடித்த எல்லா படங்களுமே ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. அந்த வகையில் எல்ஐகே திரைப்படம் ரசிகர்களுக்கு ஒரு புதுமையான அனுபவத்தை கொடுக்கும் என்பதில் எந்தவித சந்தேகமும் இல்லை. படத்தில் டிஜிட்டல் குடை ,ஆகாயத்தில் பறக்கும் கார்கள் என 2040இல் தமிழ்நாடு இப்படி இருந்தால் எப்படி இருக்கும் என்பதை காட்டியிருக்கிறார்கள்.
ஆனால் என்னதான் மாறினாலும் இந்த காதல் மட்டும் அப்படியே தான் இருக்கும் என்பதையும் தெளிவாக காட்டி இருக்கிறார்கள். இந்த நிலையில் படத்தில் சில காட்சிகளை ரசிகர்கள் சமூக வலைதளங்களில் பதிவிட்டு விமர்சித்து வருகின்றனர். அதில் ஒரு காட்சியில் தலைவர் 189 அனிருத் என இருக்கிறது. 2040ல் ரஜினி 189 வது படத்தில் நடிப்பார். அந்த படத்திற்கும் அனிருத்தான் இசை அமைப்பார் என அதை குறிப்பிட்டு கிண்டலடித்து வருகின்றனர். அதேபோல ஹாலிவுட் திரைப்படமான மிஷன் இம்பாசிபிள் திரைப்படம் ஹாலிவுட் ரசிகர்கள் மட்டுமல்ல இந்தியாவில் உள்ள ஒட்டுமொத்த ரசிகர்களையும் ஈர்த்த திரைப்படமாக அமைந்தது.
rajini
90-ல் அதனுடைய சீரிஸ் ஆரம்பித்து சமீபத்தில் தான் அதனுடைய கடைசி சீரிஸ் முடிவடைந்தது. டாம் குரூஸ் அந்த படத்தில் நடித்திருப்பார். மிஷன் இம்பாசிபிள் எட்டு வரை முடிந்துவிட்ட நிலையில் 2040ல் ஒருவேளை அந்த படம் வந்தால் அதில் யாஷ் நடித்தால் எப்படி இருக்கும் என்றும் காட்டப்பட்டுள்ளது.
RohiniSub Editor
நான் ரோகிணி. இந்த இணையதளத்தில் கடந்த 4 ஆண்டுகளாக செய்தி பிரிவில் சப் எடிட்டராக பணியாற்றுகிறேன். சினிமா தொடர்பாக அனைத்து செய்திகள் குறிப்பாக விமர்சனம், பழைய சினிமா தகவல்களை தருவதில் அதிக விருப்பம் உடையவர்.