ஹாட்ஸ்டார் ஸ்பெஷல் லிங்கம் வெப் சீரிஸ் டிரெய்லர் வெளியீடு

ஜியோ ஹாட்ஸ்டாரில்  ஒளிபரப்பக உள்ள வெப் தொடரான லிங்கம் டிரைலர் இன்று வெளியானது.
 
lingam

ஜியோ ஹாட்ஸ்டாரில்  ஒளிபரப்பக உள்ள வெப் தொடரான லிங்கம் டிரைலர் இன்று வெளியானது.

கதிர், திவ்யா பாரதி, சத்யா மற்றும் பூர்ணிமா ரவி நடித்துள்ள இந்த தமிழ் கிரைம் திரில்லர், இலட்சியம், துரோகம் மற்றும் பழிவாங்கலை மையமாகக் கொண்ட சக்திவாய்ந்த கதையைச் சொல்கிறது

ஜியோஹாட்ஸ்டாரில்  ஸ்பெஷல் தமிழ் ஒரிஜினல் தொடரான லிங்கம் படத்தின் டிரெய்லரை வெளியிட்டுள்ளது. குற்றம், அதிகாரம், துரோகம் மற்றும் பழிவாங்கல் ஆகியவற்றை மையமாக கொஅ கதை அம்சம் கொண்டது இந்த தொடர். இந்தத் தொடர் ஜூன் 26 முதல் ஜியோஹாட்ஸ்டாரில் மட்டும் ஸ்ட்ரீமிங் செய்யப்படுகிறது.

lingam

1990களிலும் 2000களின் தொடக்க காலத்திலும் தமிழ்நாட்டின் தென் மாவட்டங்களில் நடைபெற்ற நம்பமுடியாத உண்மைச் சம்பவங்களால் ஈர்க்கப்பட்ட லிங்கம், ஒரு கபடி வீரரின் வாழ்க்கையில் நிகழும் மாற்றத்தைச் சொல்லும் விறுவிறுப்பான பழிவாங்கல் கதையாகும். ஒரு கொலைக் குற்றச்சாட்டால் அவரது வாழ்க்கை முற்றிலும் மாறிப்போகிறது. கௌரவம், அடையாளம் மற்றும்  எதிர்காலம் என்ற கனவுகளுடன் தொடங்கும் அவரது பயணம், பின்னர் அநீதி, உயிர் பிழைப்பு மற்றும் பழிவாங்கல் நிறைந்த வன்முறைப் பாதையாக மாறுகிறது.

கதிர், திவ்யா பாரதி, பூர்ணிமா ரவி மற்றும் சத்யா ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். லக்ஷ்மி சரவணகுமார் எழுதி இயக்கியுள்ளளார்.. கபடி மைதானத்தின் தீவிரத்திலிருந்து அதிகாரம், வன்முறை மற்றும் பழிவாங்கலின் இருண்ட உலகம் வரை நகரும் இந்தத் தொடர், யதார்த்தமான மற்றும் அதிக பதற்றம் நிறைந்த கதையம்சத்தை வழங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

லிங்கம், ஜூன் 26 முதல் ஜியோஹாட்ஸ்டாரில் மட்டும் ஸ்ட்ரீமிங் செய்யப்படுகிறது.


 

Tags

From Around the web