Connect with us

Cinema News

அடடா மழைடா!.. தமன்னா எப்படி இருக்காரு பாருங்க!.. பையா 2 ஸ்டார்ட் பண்ற வழிய பாருங்க லிங்குசாமி!..

லிங்குசாமி இயக்கத்தில் கார்த்தி மற்றும் தமன்னா நடிப்பில் வெளியான பையா திரைப்படம் மீண்டும் திரையரங்குகளில் ரீ ரிலீஸ் செய்யப்பட்டு நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. முன்னதாக படத்தின் நாயகன் கார்த்தியை சந்தித்த லிங்குசாமி நேற்று அந்த படத்தின் ஹீரோயின் தமன்னாவை அவரது வீட்டுக்கு சென்று சந்தித்து பூங்கொத்து கொடுத்து பேசும் வீடியோ காட்சியை வெளியிட்டு ரசிகர்களை ஹேப்பி ஆக்கியுள்ளார்.

கடந்த 2010 ஆம் ஆண்டு வெளியான பையா திரைப்படம் முரட்டு பருத்திவீரனாக கார்த்தியை பார்த்து ரசிகர்களுக்கு அவர் எப்படி சார்ம் ஆனவர் என்பதை லிங்குசாமி காட்டியிருப்பார். அதேபோல தமன்னாவின் பால் மேனியையும் அடடா மழைடா பாடலில் அப்படி காட்டியிருப்பார்.

இதையும் படிங்க: தலைவர் பன்ச்சை விட இதுதான் ஃபேமஸ்.. ஒரே ஒரு டையலாக்கால் ரஜினியை மடக்கிய நிழல்கள் ரவி

அந்தப் படத்திற்கு பிறகு கார்த்தி மற்றும் தமன்னா இணைந்து சிறுத்தை படத்தில் நடித்தனர். இருவருக்கும் இடையில் காதல் கிசுகிசு எல்லாம் பையா படத்திலேயே கிளம்பியது. ஆனால், நடிகர் சிவகுமார் அதற்கு சம்மதிக்கவில்லை என்பதால் கார்த்தி பெற்றோர்களால் நிச்சயிக்கப்பட்ட பெண்ணை திருமணம் செய்து கொண்டார் என்றும் பேச்சுக்கள் அடிபட்டன.

பையா படத்தின் ரீ ரிலீஸ் இயக்குனர் லிங்குசாமிக்கு புத்துணர்ச்சியை கொடுத்துள்ளது. அஞ்சான் படத்துக்கு பிறகு தொடர்ந்து அவர் இயக்கி வரும் படங்கள் எல்லாம் படுதோல்வியை சந்தித்து புதிதாக பட வாய்ப்புகளே இல்லாமல் இருந்து வரும் நிலையில், பையா படத்தின் ரீ ரிலீஸை பார்த்த ரசிகர்கள் தாராளமாக இயக்குனர் லிங்கசாமி பையா 2 படத்தை இயக்கி ஹிட் கொடுக்கலாம்.

இதையும் படிங்க: விஜய்யின் ‘கோட்’ அப்டேட்டுக்கு போட்டியாக சூர்யா வெளியிட்ட கங்குவா மேட்டர்!.. அப்போ கிளாஷ் இருக்கா?..

கார்த்தி மற்றும் தமன்னா மீண்டும் இணைந்து நடித்தால் நிச்சயம் அந்த படம் தாறுமாறு ஓடும் என ரசிகர்கள் தங்கள் எதிர்பார்ப்புகளை அடுக்கி வருகின்றனர்.

பையா படத்தைத் தொடர்ந்து அஞ்சான் படத்தையும் ரீ எடிட் செய்து லிங்குசாமி வெளியிட போவதாக அறிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

author avatar
Saranya M
Continue Reading

More in Cinema News

To Top