Categories: Cinema News latest news

சண்டக்கோழி படத்தில் முதலில் நடிக்கவிருந்தது விஜய்யா?.. செம கோபத்தில் இருந்த லிங்குசாமி.. என்ன ஆச்சு?

லிங்குசாமி இயக்கத்தில் விஷால், மீரா ஜாஸ்மின், ராஜ்கிரண் மற்றும் லால் நடித்த சண்டக்கோழி திரைப்படம் கடந்த 2005-ம் ஆண்டு டிசம்பர் 16-ஆம் தேதி வெளியானது. சமீபத்தில் அந்த படம் வெளியாகி 18 ஆண்டுகள் ஆனதை நடிகர் விஷால் ட்வீட் போட்டு கொண்டாடி இருந்தார்.

இந்நிலையில் யூடியூப் சேனல் ஒன்றுக்கு பேட்டி அளித்த அந்த படத்தின் இயக்குனர் லிங்குசாமி சண்டக்கோழி படத்தில் முதலில் நடிக்க விழுந்தது தளபதி விஜய் தான் என்றும் ஆனால் முழு கதையை அவர் கேட்கவில்லை என்றும் கூறியுள்ளார்.

இதையும் படிங்க: ரகுவரன் நடிக்கும் போது பிரகாஷ்ராஜ் இப்படி பண்ணுவாருனு நினைக்கல! இயக்குனர் பகிர்ந்த சீக்ரெட்

சண்டக்கோழி படத்தின் வெற்றி விழா லீ மெரிடியன் ஹோட்டலில் நடைபெற்ற போது விஜய் வந்தார். நான் ஒரு ஓரமாக நின்றேன். என்னை பார்த்து விட்டார். நேரடியா என்னிடம் வந்து அண்ணா படம் சூப்பரா இருந்துச்சு நல்லா பண்ணி இருக்கீங்க எனப் பாராட்டினார்.. எனக்கு விஜய் மீது சற்று வருத்தம் இருந்தது, நீங்கதான் இரண்டாவது பாதியை கேட்காமல் போயிட்டீங்க என்றேன்.. அதுவும் நல்லதுதான்.. இதுதான் கரெக்டா இருந்துச்சு இண்டஸ்ட்ரி எப்படி ஒருத்தன் வரணும்னு இருக்கு என அப்பவே புரட்சித் தளபதி விஷாலை தட்டிக் கொடுத்தவர் விஜய் என அந்தப் பேட்டியில் லிங்குசாமி கூறியுள்ளார்.

சூர்யாவை வைத்து அஞ்சான் படத்தை இயக்கிய லிங்குசாமி அந்த படம் தோல்வி அடைந்த நிலையில் அதன் பின்னர் முன்னணி ஹீரோக்களை வைத்து படம் இயக்க முடியாமல் தவித்து வருகிறார். எப்படியாவது மீண்டும் டாப் ஹீரோவுக்கு கதை சொல்லி நல்ல தரமான படத்தை கொடுப்பேன் என்ற நம்பிக்கையும் அவர் தெரிவித்துள்ளார்.

இதையும் படிங்க: சரிகமப டைட்டில் வின்னர்!.. 10 லட்சம் ரூபாயை தட்டித் தூக்கிய அந்த போட்டியாளர் யார் தெரியுமா?..

Saranya M
Published by
Saranya M