Categories: Cinema News latest news

யாருக்கோ விரித்த வலை!.. கமலால் படாதபாடு பட்ட லிங்குசாமி!..

கமல் நடிப்பில் 2015 ஆம் ஆண்டு வெளியான படம் ‘உத்தமவில்லன்’ திரைப்படம். இந்த படத்தின் கதை , திரைக்கதையை கமல் மற்றும் கிரேஸி மோகன் எழுத கமலின் நண்பரும் நடிகருமான ரமேஷ் அரவிந்த் இந்த படத்தை இயக்கியிருந்தார். படத்தை தயாரித்தவர் இயக்குனர் லிங்குசாமி.

kamal lingusamy

படத்தில் கமலுடன் பூஜா குமார், ஆண்ட்ரியா, கே.பாலசந்தர், ஊர்வசி என முன்னனி நட்சத்திர பட்டாளமே நடித்திருந்தது. படம் தயாரிக்கும் போதே ரசிகர்கள் முதல் பிரபலங்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பு இருந்தது. ஆனால் படம் வசூல் ரீதியாக மிகப்பெரும் தோல்வியை சந்தித்தது. இது லிங்குசாமிக்கு ஒரு விதத்தில் பெரும் நஷ்டத்தை ஈட்டித்தந்தது.

இதையும் படிங்க : சரத்குமாரால் வசமாக சிக்கிக் கொண்ட விஜய்!.. இத மட்டும் சொல்லியிருந்தால் அவர் ரேஞ்சே வேற..

ஆனால் முதலில் லிங்குசாமிக்கு முன் படத்தை தயாரிக்கும் பொறுப்பை கமல் தயாரிப்பாளர் தனஞ்செயனிடம் தான் கொடுத்திருக்கிறார். ஆனால் தனஞ்செயன் படத்தின் கதையை எல்லாம் கேட்டுவிட்டு இந்த படத்திற்கு நீங்க சொல்லும் பட்ஜெட் அதிகம். கொஞ்சம் குறைத்துக் கொண்டால் நான் எடுக்க தயார் என்று கூறியிருக்கிறார்.

kamal

ஆனால் தனஞ்செயன் இப்படி சொன்னது கமலுக்கு ஒரு கசப்பான அனுபவத்தை தந்திருக்கிறது. அதன் பிறகே லிங்குசாமியிடம் சென்றிருக்கிறது. லிங்குசாமி சம்மதித்தது தனஞ்செயனை நம்பித்தானாம். ஏனெனில் லிங்குசாமி, தனஞ்செயன் மற்றும் சிலர் நண்பர்களாக இருந்திருக்கின்றனர். தனஞ்செயனுடனே சேர்ந்து உத்தமவில்லனை தயாரிக்கலாம் என்ற யோசனையிலேயே சம்மதித்திருக்கிறார்.

இதையும் படிங்க : இப்படித் தான் உடல் எடையைக் குறைத்தாரா…விஜய் சேதுபதி…!? பயில்வான் ரங்கநாதனின் அறிவுரை

ஆனால் தனஞ்செயன் முடியாது என்று கூறவே லிங்குசாமி தனியாக திருப்பதி பிரதர்ஸ் என்ற பெயரில் படத்தை தயாரிக்க முன்வந்திருக்கிறார். கிட்டத்தட்ட படத்திற்கான பட்ஜெட் 15 கோடி பணம் முழுவதும் வட்டிக்கு கடனாக பெற்று தான் லிங்குசாமி உத்தமவில்லன் படத்தை எடுத்தாராம். ஆனால் படம் தோல்வியடைந்ததால் அது அவருக்கு நினைத்து பார்க்கமுடியாத நஷ்டத்தை பெற்று தந்தது.

dhananjayan

அதிலிருந்து கடனில் மூழ்கினார் லிங்குசாமி என்று பத்திரிக்கையில் செய்திகள் வெளியாயின. ஆயினும் இதை பற்றி லிங்குசாமி எதுவும் சொல்லவில்லை. இதற்கு காரணம் கமல் என்றும் வாயை திறக்கவில்லை. இப்ப வரைக்கும் கமல் மீது நம்பிக்கையுடனே இருக்கிறார்.

ஏனெனில் படம் தோல்விக்கு பிறகு கமல் லிங்குசாமியிடம் நாம் சேர்ந்து அடுத்த படம் பண்ணுவோம் என்று சொன்னாராம். அந்த வார்த்தையை உண்மையாக்குவார் கமல் என்று நம்பிக்கையுடன் காத்துக் கொண்டிருக்கிறார் லிங்குசாமி. இந்த தகவலை தனஞ்செயனே கூறினார்.

Rohini Sub Editor
நான் ரோகிணி. இந்த இணையதளத்தில் கடந்த 4 ஆண்டுகளாக செய்தி பிரிவில் சப் எடிட்டராக பணியாற்றுகிறேன். சினிமா தொடர்பாக அனைத்து செய்திகள் குறிப்பாக விமர்சனம், பழைய சினிமா தகவல்களை தருவதில் அதிக விருப்பம் உடையவர்.
Published by
Rohini