Connect with us
/srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 137
">


Warning: Undefined array key 0 in /srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 137

Warning: Attempt to read property "cat_name" on null in /srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 137

முன்னணி டோலிவுட் ஹீரோவை தமிழுக்குக் கூட்டி வரும் இயக்குனர்!

முன்னணி டோலிவுட் ஹீரோ ஒருவரை இயக்குனர் லிங்குசாமி முதல்முறையாகத் தமிழில் அறிமுகப்படுத்த இருக்கிறார்.�

9b0e6717c9054276b5819e97972c21f0

ரன், பையா, அஞ்சான், பீமா, சண்டைக்கோழி, ஜி உள்ளிட்ட படங்களை இயக்கியவர் கோலிவுட்டின் மூத்த இயக்குனர் லிங்குசாமி. இவர் தயாரிப்பில் வெளியான சில படங்கள் எதிர்பார்த்தபடி அமையாததால், கடன் நெருக்கடியில் தவித்து வந்ததாகக் கூறப்படுகிறது. இதனால், சில காலம் படங்கள் எதையும் இயக்காமல் ஒதுக்கியே இருந்தார். 

இந்தநிலையில், தெலுங்கின் முன்னணி ஹீரோவான ராம் பொத்தினேனியை இவர் இயக்க இருக்கிறார். தெலுங்கு ஹீரோக்கள் பலரும் வாய்ப்புக் கிடைத்தும் சில சமயங்களில் நேரடித் தமிழ் படங்களில் நடிக்கத் தயக்கம் காட்டி வந்தனர். இந்தநிலையில், லிங்குசாமி இயக்கத்தில் தமிழ், தெலுங்கு என இரு மொழிகளிலும் வெளியாகும் புதிய படத்தில் நடிக்க ராம் ஒப்புக்கொண்டிருக்கிறார். லிங்குசாமியின் வழக்கமான மாஸ் எண்டர்டெயினராக உருவாக இருக்கும் இந்தப் படம் பூஜையோடு இன்று தொடங்குகிறது. விரைவில் ஹீரோயின் உள்பட படத்தில் பணியாற்றும் குழுவினர் அறிவிக்கப்படுவார்கள் என்கிறார்கள். எஸ் எஸ் ஸ்கிரீன்ஸ் பேனரில் ஸ்ரீனிவாச சித்தூரி இந்தப் படத்தைத் தயாரிக்கிறார். 

 

google news
Continue Reading

More in
Warning: Undefined array key 0 in /srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 320

Warning: Attempt to read property "cat_name" on null in /srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 320

To Top