ஸ்பைடர் மேன் பட டீசரில் மெஸ்ஸி!.. 40 செகண்டுக்கு சம்பளம் இவ்வளவு கோடியா?!..
Jul 3, 2026, 15:00 IST
ஹாலிவுட்டில் ஸ்பைடர் மேன் தொடர்பாக பல திரைப்படங்கள் வந்துவிட்டது. அதிலும் ஸ்பைடர் மேன் படம் பல பாகங்கள் வந்துவிட்டது. இந்நிலையில்தான், Spider Man : Brand New day என்கிற திரைப்படம் வருகிற 31ஆம் தேதி உலகம் முழுவதும் வெளியாகவுள்ளது.
ஹாலிவுட்டில் உருவாகும் இந்த படம் தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம், ஹிந்தி உள்ளிட்ட பல உலக மொழிகளில் டப் செய்யப்பட்டு வெளியாகிறது. இந்த நிலையில் தான் இந்த படத்தின் டீசர் சமீபத்தில் வெளியானது.
இதில் அர்ஜென்டினா நாட்டைச் சேர்ந்த கால்பந்து விளையாட்டு வீரர் மெஸ்ஸி இந்த படத்தின் டீசரில் நடித்திருக்கிறார். அதற்காக அவருக்கு ரூ.143 கோடி சம்பளம் கொடுக்கப்பட்டிருப்பதாக செய்திகள் வெளியாகி இணையத்தை அதிர வைத்திருக்கிறது. இத்தனைக்கும் 40 வினாடிகள் கொண்ட அந்த டீசரில் மெஸ்ஸி வெறும் 5 வார்த்தைகள் மட்டும்தான் பேசியிருக்கிறார்.
