நூறுச்சாமி டூ இதயம் முரளி வரை… இந்த வார ஓடிடி ரிலீஸ்!

பிரபல ஓடிடிக்களில் வாரா வாரம் ரிலீஸாகும் படங்களுக்காக ரசிகர்கள் காத்திருக்கின்றனர். அந்த வகையில் இந்த வாரம் மிகப்பெரிய எதிர்பார்ப்புகளுக்கு இடையே நல்ல லிஸ்ட்டாக அமைந்து இருக்கிறது. 
 
ott

ஒவ்வொரு வாரமும் பிரபல ஓடிடி சேனல்களில் புது படம் வெளியிட்டிருக்க ரசிகர்கள் காத்திருக்கின்றனர். அந்த வகையில் இந்த வாரம் வெளியாக இருக்கும் புது படம் மற்றும் வெப் சீரிஸ்களின் தொகுப்புகள்.

தனுஷின் சகோதரி மகன் நடிகர் பவிஷ் நடிப்பில் லவ் ஓ லவ் Primeல் ரிலீஸ் செய்யப்பட்டு இருக்கிறது. மேலும் யோகி பாபு நடிப்பில் சன்னிதானம் பி ஓ படமும் வெளியாகி இருக்கிறது.

தொடர்ந்து ஆகஸ்ட் 7ஆம் தேதி வதந்தி சீசன் 2 வெப் சீரிஸ் வெளியிடப்பட இருக்கிறது. முதல் சீசனில் எஸ் ஜே சூர்யா நடித்திருந்த போலீஸ் கதாபாத்திரத்தில் இந்த முறை எஸ் ஐ மூஸாவாக சசிகுமார் நடித்திருக்கிறார்.

 அதர்வா முரளி நடிப்பில் வெளியான இதய முரளி திரைப்படம் netflix ஓடிடியில் வெளியிடப்பட இருக்கிறது. மேலும் விஜய் ஆண்டனி மற்றும் ஸ்வஸ்திகா நடிப்பில் வெளியான நூறு சாமி திரைப்படம் zee5 ஓடிடியில் வெளியாகி இருக்கிறது.

From Around the web