வெப்சீரிஸ் ஃபேன்னா நீங்க… மிஸ் பண்ணக்கூடாத டாப் சீரிஸ் இதானாம்!

வெப்சீரிஸ் உங்களுடைய ஃபோரான நேரத்தை சரி செய்ய பல மணி நேரம் ஃபுல் எண்டர்டெயின்மெண்ட்டாக வைத்திருக்கும் என்பதில் சந்தேகமே இல்லை
 
ott

Webseries: தமிழ் சினிமாவின் ஆதிக்கத்தை காலி செய்து தற்போது வெப்சீரிஸ் டாப் இடத்தை தக்க வைத்து இருக்கும் நிலையில், நீங்க மிஸ் பண்ணக்கூடாத டாப் சீரிஸ் லிஸ்ட் இங்கே!

Money Heist 

ப்ரொபசர் தலைமையில் பலரும் இணைந்து ஒரு பேங்கை திருட செல்கின்றனர். சத்தம் இல்லாமல் காசை வெளியில் எடுத்து வந்தும் விடுகின்றனர். இதை தொடர்ந்து தங்கம் திருடவும் செல்ல ஆட்டம் பரபரப்புகிறது. நெட்பிளிக்ஸ் ஓடிடியில் இருக்கிறது. 

Stranger Things 

ஒரு சாதாரண சின்ன பையன் திடீரென காணாமல் போக அந்த கேள்விக்குறியே சீரிஸை பரபரப்பாக வைக்கிறது. முதல் சீசன் டல்லடிக்க அடுத்தடுத்த சீசன் பரபரப்பாகிறது. நெட்பிளிக்ஸ் ஓடிடியில் இருக்கிறது. 

Squid Game 

பெரிய கடன் சுமையில் இருக்கும் 456 பேரை ஒரு இடத்தில் அடைத்து வைத்து போட்டி நடத்துகின்றனர். அந்த போட்டியில் தோற்கும் ஆட்களை உடனே சுட்டு தள்ளியும் விடுகின்றனர். பல கோடி பரிசை ஹீரோ அடைந்து அடுத்த சீசனில் வந்து அவர் வென்றாரா தோற்றாரா என்ற ஆர்வம் தொற்றுக்கொள்ளும். இதுவும் நெட்பிளிக்ஸ் ஓடிடியில் இருக்கிறது.

Wednesday

யாருமே யோசிக்காத ஒரு அசாதாரண குணங்கள் கொண்ட வெனஸ்டே ஆடம்ஸ், ஒரு புதிய பள்ளியில் சேருகிறாள். அங்கு நடக்கும் தொடர் கொலைகளுக்குப் பின்னால் இருக்கும் மர்மமும், அந்தப் பள்ளியின் ரகசியங்களும் தான் இந்தக் கதை. இதுவும் நெட்பிளிக்ஸ் ஓடிடி தான்

Alice in Wonderland

திடீரென ஒரு ஊரில் சிலரை தவிர எல்லாரும் காணாமல் போகின்றனர். அங்கு போட்டி நடக்கும் நிலையில் என்ன நடக்கும் என்பதே சீரிஸ் பார்க்க பரபரப்பை பத்த வைக்கிறது. நெட்பிளிக்ஸ் ஓடிடியில் இந்த வெப்சீரிஸும் இருக்கிறது. 

Berlin

மணி ஹெய்ஸ்ட் சீரிஸில் முக்கிய கேரக்டராக இருந்த பெர்லின் பெயரில் ஒரு வெப்சீரிஸ் நெட்பிளிக்ஸில் இருக்கிறது. இதுவும் கொள்ளையை மையமாக வைத்து உருவாக்கப்பட்டு இருக்கிறது. மணிஹெய்ஸ்ட் விரும்பிகளுக்கு பக்கா டைம்பாஸ்!

 

 

Tags

From Around the web