×

தாயால் கைவிடப்பட்ட சிறுமி… உறவினர்கள் அஜாக்கிரதை – கடத்திச் சென்ற காதலன்!

சென்னையில் கல்யாணம் செய்து கொள்வதாக சிறுமியை அழைத்துச் சென்று பாலியல் பலாத்காரம் செய்த நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.

 

சென்னையில் கல்யாணம் செய்து கொள்வதாக சிறுமியை அழைத்துச் சென்று பாலியல் பலாத்காரம் செய்த நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.

விழுப்புரத்தைச் சேர்ந்த 15 வயது சிறுமியை விட்டுவிட்டு சென்றதால் சென்னையில் உள்ள உறவினர்கள் வீட்டில் வசித்து வந்துள்ளார். அங்கு அந்த வீட்டுக்கு தண்ணீர் கேன் போடவரும் சதீஷ்குமார் என்பவரோடு பழக்கம் ஏற்பட சிறுமியைத் திருமணம் செய்துகொள்வதாக சதீஷ் சொல்லியுள்ளார்.

அதனை நம்பி அவரோடு வீட்டை விட்டு வெளியேறியுள்ளார் சிறுமி. ஆனால் சதீஷ்குமாரோ அவரை நீலாங்கரையில் உள்ள ஒரு வீட்டில் அடைத்து வைத்து பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். அதுமட்டுமில்லாமல் தனது நண்பர்களான வினோத் மற்றும் ராஜா ஆகியோருடன் சேர்ந்து கூட்டு பாலியல் வன்கொடுமை செய்துள்ளார். கிட்டத்தட்ட இரண்டு வாரம் இதுபோல அந்த சிறுமியை அவர்கள் கொடுமைப் படுத்தியுள்ளனர்.

இதையடுத்து உறவினர்கள் கொடுத்த புகாரின் பேரில் அவர்களை போலீஸார் போக்ஸோ சட்டத்தின் கீழ் கைது செய்தனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

From around the web

Trending Videos

Tamilnadu News