×

லோக்கல் சேனல்லாம் இல்ல... நேரடியாக இண்டர்நேஷனல் சேனல்தான்.. வைரலாகும் ரஜினியின் புகைப்படம்

டிஸ்கவரி சேனலில் 'மேன் வெர்சஸ் வைல்ட்’ என்ற நிகழ்ச்சி மிகவும் புகழ்பெற்றது.இந்நிகழ்ச்சியில் அமெரிக்க முன்னாள் அதிபர் பராக் ஒபாமா, பிரதமர் மோடி உள்பட பல பிரபலங்கள் கலந்து கொண்டுள்ளனர். 
 

இந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக நடிகர் ரஜினி நேற்று மைசூர் கிளம்பி சென்றார். மைசூர் அருகே உள்ள பந்திபுரா புலிகள் காப்பகத்தில் இந்த இந்த ஆவணப் படத்தின் படப்பிடிப்பு நடைபெற்றதாக கூறப்பட்டது. ஏற்கனவே பிரதமர் மோடியை இயக்கிய பேர்கிரில்ஸ் இந்த ஆவணப்படத்தை இயக்கி வந்தார். 

மேலும், இந்த படப்பிடிப்பின் போது கணுக்கால் மற்றும் தோல்பட்டையில் காயம் ஏற்பட்டதால், படப்பிடிப்பு நிறுத்தப்பட்டதாக கூறப்பட்டது. அது சிறு காயம்தான் என ரஜினி மறுத்துள்ளார்.

இந்நிலையில், படப்பிடிப்பு குழுவினருடன் ரஜினிகாந்த் நிற்கும் புகைப்படம் ஏற்கனவே வெளியாகியிருந்தது. தற்போது, நிகழ்ச்சியை நடத்தும் பியர் க்ரில்ஸுடன் ரஜினி நிற்கும் புகைப்படம் வெளியாகியுள்ளது.  இந்த புகைப்படத்தை பகிரும் ரஜினி ரசிகர்கள் ‘ இந்த சோக்கல் சேனல், இந்தியன் சேனல் எல்லாம் இல்ல... நேரடியா இண்டர்நேஷனல் சேனல்தான்’ என பதிவிட்டு வருகின்றனர்.

From around the web

Trending Videos

Tamilnadu News