×

எனக்கு கற்றுக்கொடுத்த லாக்டவுன்: இன்ஸ்பிரேஷனல் வீடியோ வெளியிட்ட சமந்தா!

நடிகை சமந்தா  தனது இன்ஸ்டாகிராமில் "உங்கள் சொந்த உணவை வளர்ப்பது உங்கள் சொந்த பணத்தை அச்சிடுவது போன்றது - ரான் பின்லே" என்ற தத்துவதுடன் லாக்டவுனில் தான் கற்றுக்கொண்ட பல விஷயங்கள் குறித்து வீடியோ வெளியிட்டுள்ளார். அதில்,

 

 "என் வாழ்நாள் முழுவதும் உணவை எடுத்துக் கொண்ட பிறகு, இந்த கொரோனா லாக்கடவுன் எனக்கு ஒரு புதிய உணவு முறையையும் ஒரு புதிய பொழுதுபோக்கையும் கற்றுக் கொடுத்தது. நான் என் சொந்த வீட்டில் என் சொந்த உணவை வளர்க்க கற்றுக்கொண்டேன்! ஒரு பதற்றமான அனுபவம் தான் ஆனால் இது நடந்ததில் மகிழ்ச்சி அடைகிறேன். என கூறி வீடியோ வெளியிட்டுள்ளார்.

தமிழ், தெலுங்கு திரையுலகில் முன்னணி நாயகியாக வலம் வரும் நடிகை சமந்தா, கடந்த ஆண்டு அக்டோபர் 6-ம் தேதி தெலுங்கு நடிகர் நாக சைதன்யாவை காதல் திருமணம் செய்துகொண்டார். இவர்கள் இருவரும் விண்ணைத்தாண்டி வருவாயா தெலுங்கு ரீமேக்கான ஏ மாய சேஸாவே ஷூட்டிங் முதலே காதலித்து வந்தனர்.

தற்போது கொரோனா ஊரடங்கு என்பதால் 24 மணிநேரமும் வீட்டில் தங்கியிருக்கும் பிரபலங்கள் தங்களுக்கு போர் அடிக்காமல் இருக்க அவரவர் புத்தகங்கள் படிப்பது, சமைப்பது, கார்டனில் வேலை செய்வது, நடனமாடுவது, விழிப்புணர்வு வீடியோ வெளியிடுவது என தங்களை பிஸியாக வைத்துள்ளனர்.

From around the web

Trending Videos

Tamilnadu News