
latest news
Lokah Chpater 2: டொவினோ தாமஸ், துல்கர் சல்மான் செம மாஸ்!.. புரமோ வீடியோ எப்படி இருக்கு?..
கடந்த சில வருடங்களாகவே மலையாள திரைப்படங்கள் 100 கோடி வசூலை தாண்டி வருகிறது. அதுவும் தமிழ்நாட்டிலும் அந்த படங்கள் அதிக வசூலை பெற்றிருக்கிறது. உதாரணத்திற்கு மஞ்சுமெல் பாய்ஸை சொல்ல முடியும். இந்த படம் தமிழ்நாட்டிலேயே 50 கோடிக்கு மேல் வசூல் செய்தது. மொத்தமாக இப்படம் 200 கோடி வசூலை தாண்டியது.
அதன்பின் மோகன்லால் நடிப்பில் வெளிவந்த எம்புரான் படம் மலையாளத்தில் அதிக வசூலை பெற்றது. இந்நிலையில்தான் ஆகஸ்ட் மாதம் வெளிவந்த லோகா திரைப்படம் அசத்தலான வெற்றியை பெற்றிருக்கிறது. டோமினிக் அருண் இயக்கியிருந்த இந்த படத்தில் கல்யாணி பிரியதர்ஷன் முக்கிய வேடத்தில் நடித்திருந்தார். பேண்டஸி கலந்த ஆக்சன் படமாக வெளிவந்த லோகாவில் நடன இயக்குர் சாண்டி வில்லனாக நடித்திருந்தார்.
இந்த படத்தை நடிகர் துல்கர் சல்மான் தயாரித்திருந்தார். இப்படம் மோகன்லாலின் எம்புரான் படத்தை விட அதிக வசூலை அள்ளியது. இந்தியாவில் மட்டும் இப்படம் 141.85 கோடி வசூல் செய்தது. மோகன்லாலின் எம்புரான் 141.60 கோடி வசூல் செய்திருந்தது. உலகம் முழுவதும் சேர்த்து லோகா திரைப்படம் 300 கோடி வசூலை தொட்டிருப்பதாக சொல்லப்படுகிறது.

Lokah Chapter 1 அசத்தலான வெற்றியை பெற்றதால் தற்போது இரண்டாம் பாகத்தை வேகமாகவே துவங்கி விட்டார்கள். இந்த படத்தில் ஹீரோவாக டொமினோ தாமஸ் நடிக்கிறார். மேலும் துல்கர் சல்மானும் ஒரு முக்கிய வேடத்தில் நடிக்கவிருக்கிறார். இந்நிலையில் இந்த படத்தின் புரமோஷன் வீடியோவை தற்போது வெளியிட்டிருக்கிறார்கள். அதில் டொவினோ தாமஸும், துல்கர் சல்மானும் மது அருந்திக்கொண்டு பேசுவது போல காட்சிகள் வருகிறது.
அதில் ‘எனக்கு ஒரு பிரச்சனை எனில் நீ வருவதானே’ என்று டொவினோ கேட்க துல்கர் சல்மான் ‘முடியாது’ என்கிறார். ‘நாமெல்லாம் ஒரு குடும்பம்தான்’ என்கிறார் டொவினோ தாமஸ். அதற்கு ‘இல்லை’ என்கிறார் துல்கர். அதன்பின் அங்கிருந்து எழுந்து போகிறார். அவரை பார்த்து ஒரு சீட்டை தாமஸ் வீச தனது கத்தியால் அது இரண்டாக கிழிக்கிறார் துல்கர். ‘நீ எனக்காக கண்டிப்பா வருவ.. எனக்கு தெரியும்’ என்கிறார் டொவினோ தாமஸ். ‘கால் பண்ணு.. பார்க்கலாம்’ என சொல்லிவிட்டு போகிறார் துல்கர்.
அதன்பின் சாலையில் டொவினோ தாமஸ் நடந்துவர வில்லன் குரூப் அங்கே வருவது போல காட்சிகள் முடிகிறது. இதை பார்க்கும்போது இந்த படத்தில் மிகப்பெரிய எதிர்பார்ப்பு ஏற்பட்டிருக்கிறது. முதல் பாகம் போலவே Lokah Chapter 2 படமும் சூப்பர் ஹிட் அடிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.