தமிழ் சினிமாவில் தற்போதைக்கு மோஸ்ட் வாண்டட் இயக்குனர் என்றால் அது லோகேஷ் கனகராஜ் தான். அது தமிழ் சினிமாவில் மட்டுமல்ல, இந்திய சினிமாவிலேயே மோஸ்ட் வான்டட் இயக்குனராக மாறிவிட்டார்.
ஆனால், இப்படி இருக்கும் இயக்குனர்கள் சில சமயம் ஒரு பிரச்சனையில் மாட்டிக்கொள்கின்றனர். அது பிரச்சனையா அல்லது அன்பு கட்டளையா என தெரியாவில்லை. தான் ஒரு படம் கமிட் ஆகும் போதே மேலும் ஒரு படத்திற்கு சேர்த்து புக் செய்து விடுகிறார்கள்.
அப்படி தான் லோகேஷ் கனகராஜ், விக்ரம் படம் கமிட் ஆகும் போதே அதன் அடுத்த பாகத்திற்கும் கமிட் ஆகிவிட்டார். ஆனால், விக்ரம் படத்தின் பேய் ஹிட் லோகேஷின் சம்பளத்தை உயர்த்தவில்லையாம். பழைய ஒப்பந்தம் படி 12 கோடி தான் என்கிறது சினிமா வட்டாரம். 300 கோடி வசூலை குவித்த இயக்குனருக்கு வெறும் 12 கோடி தான் சம்பளமாம்.
இதையும் படியுங்களேன் – அந்த ஒரு பெண்ணை கட்டம் கட்டும் தனுஷ்.! இவர் இன்னும் திருந்தவே இல்லையா.?
ஆனால், இந்த விஷயத்தில் நெல்சன் கெட்டிக்காரர் தான் என்கிறது சினிமா வட்டாரம். டாக்டர் ரிலீசுக்கு முன்பே விஜய்யின் பீஸ்ட் வாய்ப்பு. பீஸ்ட் எதிர்பார்ப்பு உச்சத்தில் இருக்கும் போதே ரஜினி பட வாய்ப்பு. அப்போதே புக் செய்துவிட்டதால், நெல்சன் அப்போதே 20 கோடிக்கு ஒப்பந்தம் செய்துவிட்டாராம்.
ஆனால், பீஸ்ட் வந்த பின்னர் நிலைமையே வேறு. தற்போது சன் பிக்ச்சர்ஸ், தலைவர் 169 படத்தின் கதை, திரைக்கதை புத்தகத்தை திருப்பி திருப்பி மெருகேற்ற சொல்லி வருகிறதாம். அதே நேரத்தில், ரஜினியே தனது சம்பளத்தை குறைத்து கொண்டாலும், நெல்சன் அவரது 20 கோடி சம்பளத்தை குறைக்கவில்லை என்கிறது சினிமா வட்டாரம்.
TVK Vijay:…
TVK Stampede:…
Vijay TVK:…
Karur: தமிழக…
Tvk Stampede:…