Categories: Cinema News latest news

சூர்யாவின் படைத்தளபதியாக லாரன்ஸ்!.. என்ன புதுசா இருக்கா?.. லோகேஷின் புது ஆட்டம்!..

இளம் இயக்குனர்களுக்கு மத்தியில் சைலண்டாக வந்து இன்று தமிழ் சினிமாவே பிரமித்து பார்க்க கூடிய வகையில் தன் படங்களின் மூலம் சாதித்துக் காட்டியவர் இயக்குனர் ரோலக்ஸ்.

lokesh

எடுத்தது நான்கு படங்கள் ஆனாலும் ஒரு யுனிவெர்ஸையே உருவாக்கி ரசிகர்கள் மத்தியில் மிகவும் பிரபலமாகியிருக்கிறார். மாநகரம், கைதி, மாஸ்டர், விக்ரம் எடுத்த படங்கள் எல்லாம் முன்னனி நடிகர்களை வைத்து தன் சாமர்த்தியத்தை நிருபித்திருக்கிறார். அடுத்ததாக விஜயின் நடிப்பில் தளபதி – 67 படத்தை இயக்க இருக்கிறார்.

lokesh, vijay

இந்த படத்தில் கமலை கேமியோ ரோலில் நடிக்க வைக்கிறார் என்கிற தகவல் கூட பரவி வருகின்றது. இது ஒரு பக்கம் இருக்க இவரது யுனிவெர்ஸில் மற்றுமொரு நடிகர் களமிறங்க போவதாக செய்திகள் வெளியாகியுள்ளது. அது வேறு யாருமில்லை. நடிகர் லாரன்ஸ் தான். ஆனால் தளபதி -67ல் இல்லை.

lokesh

விஜயின் படத்தை முடித்து விட்டு கைதி – 2 எடுக்க இருக்கிறார் லோகேஷ். அந்த படத்தில் வில்லனாக லாரன்ஸ் தான் நடிக்கிறார். அதாவது விக்ரம் படத்திற்கும் கைதி படத்திற்கும் தொடர்பு இருக்கிற மாதிரி கதையில் காட்டியிருப்பார். அதன் படி சூர்யாவின் படைத்தளபதியாக விக்ரம் படத்தில் விஜய் சேதுபதி இயங்கி கொண்டிருப்பார். ஆனால் விஜய் சேதுபதி இறந்து போக அந்த இடத்திற்கு தான் அடுத்த படைத்தளபதியாக லாரன்ஸ் நடிக்க இருக்கிறார் என்ற மற்றொரு தகவல் பரவுகிறது.

lokesh, karthi

இது அப்படியே கைதி – 2வில் தொடர்வதாக இருக்கிறது என்று சொல்லப்படுகிறது. இந்த தகவல் படி கைதி – 2 வில் சூர்யாவின் கதாபாத்திரம் எட்டிப் பார்க்கலாம் என்றும் நம்பப்படுகிறது. எது இருந்தாலும் படத்தின் பூஜை ஆரம்பிக்கும் போது தான் மேலும் சில விபரங்கள் தெரியவரும்.

lawrence

Rohini Sub Editor
நான் ரோகிணி. இந்த இணையதளத்தில் கடந்த 4 ஆண்டுகளாக செய்தி பிரிவில் சப் எடிட்டராக பணியாற்றுகிறேன். சினிமா தொடர்பாக அனைத்து செய்திகள் குறிப்பாக விமர்சனம், பழைய சினிமா தகவல்களை தருவதில் அதிக விருப்பம் உடையவர்.
Published by
Rohini