மும்பைக்கு பறக்கப்போகும் லோகேஷ் கனகராஜ்... அடுத்த கட்டத்துக்கு செல்லும் அல்லு அர்ஜுனின் 'AA23'-ன் வேலைகள்!
Jun 23, 2026, 21:28 IST
'புஷ்பா 2: தி ரூல்' படத்தின் வெற்றிக்கு பிறகு நடிகர் அல்லு அர்ஜுன் கைவசம் 'ராக்கா' மற்றும் 'AA23' என இரண்டு படங்கள் இருக்கிறது.
இதில் 'ராக்கா' படத்தை இயக்குநர் அட்லீ இயக்கி கொண்டிருக்கிறார். இதன் படப்பிடிப்பு மும்பையில் நடந்து வருகிறது.
'AA23' படத்தை இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இயக்கவிருக்கிறார். 'மைத்ரி மூவி மேக்கர்ஸ்' நிறுவனம் தயாரிக்கும் இந்த படத்துக்கு அனிருத் இசையமைக்கவிருக்கிறார்.
தற்போது, அல்லு அர்ஜுனை வைத்து லுக் டெஸ்ட் எடுப்பதற்காக இயக்குநர் லோகேஷ் கனகராஜ் மற்றும் அவரது டீம் வருகிற ஜூன் 25-ஆம் தேதி மும்பைக்கு செல்லப்போவதாக தகவல் வெளியாகியுள்ளது.
