Categories: Cinema News latest news

அனல் பறக்கும் கடலை மிட்டாய் வியாபாரம்.! மாறி மாறி கலாய்த்து கொள்ளும் லோகேஷ் – வெங்கட் பிரபு.!

தற்போதெல்லாம் வைரல் என்ற வார்த்தை கூட இணையத்தில் வைரலாக பரவி வருகிறது. அந்தளவுக்கு எந்த விஷயம் எப்போது வைரலாகும் என்றே கணிக்க முடியாதபடி வைரலாகி வருகிறது.

அப்படித்தான், வடிவேலு காமெடிக்காட்சிகள் காலம் கடந்தும் தற்போதும் மீம்ஸ் கிரியேட்டர்களால் வைரலாகி வருகிறது. கொஞ்சம் அட்வான்ஸாக சென்று, அவரது விடியோவில் ஆடியோவை மட்டும் கட் செய்து  வேறு இருவர் பேசும் டிக் டாக் வீடியோ போன்று செய்வது வாடிக்கையாகி வருகிறது.

அண்மையில், மாநாடு இயக்குனர் வெங்கட் பிரபு மற்றும் விக்ரம் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இருவரும் ஒரு சினிமா நிகழ்ச்சியில் பங்குபெற்றுள்ளனர். அப்போது அவர்கள் பேசுவதை யாரோ வீடியோ எடுத்து அதற்கு வேறு டப்பிங் செய்து வெளியிட்டு விட்டனர்.

இதையும் படியுஙங்களேன் – அடுத்த அசுரனாக மாறிவரும் ஐஸ்வர்யா ரஜினி.! வீடியோவில் வியர்க்க வியர்க்க என்னென்ன செய்றார் பாருங்க…,

வடிவேலு, மற்றும் சிங்கமுத்து பேசும் டிவிஎஸ் சாம்ப் ஜோக் வீடியோவில் வரும் நம்ம கடலை முட்டாய் வாங்கி சாப்பிடறதோடு சரி விக்கிறதெல்லாம் இல்ல என பேசும் வசனங்களை கோர்த்து பதிவிட்டு காமெடியாக ரிலீஸ்  செய்து விட்டனர்.

இதனை வெங்கட் பிரபு பார்த்துவிட்டு காமெடியாக சிரிக்கும் படியான எமோஜிகளை பதிவிட்டுவிட்டார். அதே போல, லோகேஷும் பார்த்துவிட்டு, அதற்கு பதில் அளிக்கும் விதமாக சிரிக்கும் இமோஜிகளை பதிவிட்டு விட்டார். இந்த வீடியோ தான் தற்போது இணையாயத்தில் வைரலாக பரவி வருகிறது.

Manikandan
Published by
Manikandan