எல்.சி.யூ க்ளோஸ் ஆகல!.. அடுத்து 4 படம் வருது!.. ஹைப் ஏத்தும் லோகேஷ் கனகராஜ்!..

 
lokesh

மாநகரம் படத்தில் இயக்குனராக அறிமுகமானவர் லோகேஷ் கனகராஜ். கைதி, மாஸ்டர், விக்ரம் ஆகிய படங்கள் மூலம் உச்சத்துக்கு போனார். விஜயை வைத்து மாஸ்டர், லியோ ஆகிய இரண்டு படங்களை இயக்கியிருக்கிறார். குறிப்பாக இளைஞர்கள் கொண்டாடும் இயக்குனராக லோகேஷ் மாறினார்.  இவரின் திரைப்படத்தை LCU (Lokesh Cinematic Universe) என ரசிகர்கள் கொண்டாடினார்கள். இவரின் ஒரு படத்தில் வரும் ஒரு கதாபாத்திரம் அடுத்த படத்திலும் தொடர்வதை ரசிகர்கள் LCU என அழைக்கிறார்கள்..

அதேநேரம் ரஜினியை வைத்து லோகேஷ் கனகராஜ் இயக்கிய கூலி திரைப்படம் கலவையான விமர்சனங்களை பெற்றது. இதனால் ரஜினி - கமல் இருவரையும் வைத்து படம் இயக்கும் வாய்ப்பை லோகேஷ் கனகராஜ் இழந்தார். தற்போது அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் DC என்கிற படத்தில் நடித்து முடித்துள்ளார். இந்த திரைப்படம் வருகின்ற 31ஆம் தேதி வெளியாகவிருக்கிறது.

போல் அல்லு அர்ஜூனை வைத்து அடுத்து ஒரு புதிய படத்தை லோகேஷ் இயக்கவிருக்கிறார். இந்நிலையில் ஒரு சினிமா விழாவில் பேசிய லோகேஷ் ‘எல்.சி.யூ குளோஸ் ஆகிவிட்டதாக பலரும் நினைக்கிறார்கள்.. அது இப்போதைக்கு முடியாது.. கைதி 2,  விக்ரம் 2,  ரோலக்ஸ் ஆகிய படங்கள் அடுத்தடுத்து வரவிருக்கிறது. அது எல்லாமே ஏற்கனவே நான் ஒப்புக்கொண்ட கமிட்மெண்ட். அந்த மூன்று படங்களிலும் எல்.சி.யூ இருக்கிறது.. இப்போது ராகவா லாரன்ஸ் வைத்து நான் தயாரித்து வரும் பென்ஸ் படம் எல்.சி.யூதான்’ என அவர் கூறியிருக்கிறார்..

Tags

From Around the web