DC Box Office : 3 நாட்களிலேயே இத்தனை கோடி வசூலித்ததா டிசி?
Aug 10, 2026, 05:47 IST
3 நாட்களில் 'டிசி' செய்த வசூல் தெரியவந்துள்ளது. பிஸியாக முன்னணியில் இருக்கும் இளம் இயக்குநர் லோகேஷ் கனகராஜை அழைத்து வந்து ஹீரோவாக்கியிருக்கிறார் இயக்குநர் அருண் மாதேஸ்வரன்.
'டிசி' என்ற இந்த படம் கடந்த ஆகஸ்ட் 7-ஆம் தேதி உலகமெங்கும் வெளி வந்தது. இதில் ஹீரோயினாக வாமிகா கபி வலம் வந்திருக்கிறார்.
மேலும், முக்கிய கேரக்டர்களில் தலைவாசல் விஜய், கஸ்தூரி ராஜா, சஞ்சனா, கிரிஷ் தயாள், ஜவஹர் சக்தி ஆகியோர் நடித்திருக்கிறார்கள். இதற்கு 'ராக்ஸ்டார்' அனிருத் ரவிச்சந்தர் தான் இசையமைத்திருக்கிறார்.
இப்படம் ரசிகர்களுக்கு ஆக்ஷன் ட்ரீட்டாக அமைந்திருக்கிறது. பாக்ஸ் ஆபிஸிலும் லோகேஷ் கனகராஜ் மாஸ் காட்டி வருகிறார். கடந்த 3 நாட்களிலேயே உலக அளவில் ரூ.31.86 கோடி வசூல் செய்துள்ளதாக தகவல் கிடைத்திருக்கிறது.