DC Box Office : அதுக்குள்ள 50 கோடியை நெருங்கியதா டிசி?

 
DC

4 நாட்களில் 'டிசி' செய்த வசூல் தெரியவந்துள்ளது. 'ராக்கி, சாணிக் காயிதம்' போன்ற படங்களை இயக்கிய அருண் மாதேஸ்வரன் இயக்கியிருக்கும் புது ஆக்ஷன் படம் தான் 'டிசி' (DC).

இதில் பிரபல இயக்குநர் லோகேஷ் கனகராஜ் தேவதாஸ் என்ற ரோலில் ஹீரோவாகவும், வாமிகா கபி சந்திரா என்ற ரோலில் ஹீரோயினாகவும் நடித்துள்ளனர்.

முதல் படத்திலேயே லோகேஷ் அருமையாக நடித்துள்ளார் என அவருக்கு லைக்ஸ் குவிந்து வருகிறது. இப்படத்தில் அனிருத்தின் மியூசிக் ஹைலைட்டாக அமைந்துள்ளது.

படம் பாக்ஸ் ஆபிஸிலும் தூள் கிளப்பி வருகிறது. கடந்த 4 நாட்களிலேயே உலக அளவில் ரூ.43.90 கோடி வசூல் செய்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. இன்னும் 2 நாட்களில் 50 கோடியை தாண்டி விடும் என எதிர்பார்க்கப்படுகிறது.

From Around the web