DC Box Office : பாக்ஸ் ஆபிஸில் தூள் கிளப்பும் டிசி... ஒரே வாரத்தில் இத்தனை கோடியா?
Aug 14, 2026, 08:06 IST
ஒரு வாரத்தில் 'டிசி' செய்த வசூல் தெரியவந்துள்ளது. ஆக்ஷன் படங்களை விரும்பி பண்ணி வந்தவர் இயக்குநர் லோகேஷ் கனகராஜ்.
அவரையே 'டிசி' என்ற ஆக்ஷன் படத்தில் ஹீரோவாக்கி விட்டார் இயக்குநர் அருண் மாதேஸ்வரன். கடந்த ஆகஸ்ட் 7-ஆம் தேதி திரையரங்குகளில் ரிலீஸ் ஆன இதில் வாமிகா கபி தான் லோகேஷுக்கு ஜோடி.
மேலும், தலைவாசல் விஜய், சஞ்சனா கிருஷ்ணமூர்த்தி, கஸ்தூரி ராஜா, ஜவஹர் சக்தி, சரத் ஆகியோர் நடித்துள்ளனர். முகேஷ்.ஜி ஒளிப்பதிவு செய்துள்ள இந்த படத்துக்கு அனிருத் இசையமைத்துள்ளார்.
ரசிகர்களிடையே அமோக வரவேற்பை பெற்று வரும் இப்படம் பாக்ஸ் ஆபிஸிலும் தூள் கிளப்பி வருகிறது. கடந்த 7 நாட்களிலேயே உலக அளவில் ரூ.64.38 கோடி வசூல் செய்துள்ளதாம்.