டிசி இத்தனை கோடி வசூல் பண்ணும்னு யாருமே நினைக்கல!

 
Dc

DC : 8 நாட்களில் 'டிசி' செய்த வசூல் தெரியவந்துள்ளது. கமலின் 'விக்ரம்', விஜய்யின் 'லியோ', ரஜினியின் 'கூலி' போன்ற படங்களை இயக்கிய இயக்குநர் லோகேஷ் கனகராஜ் 'டிசி' படத்தில் கதாநாயகன் ஆக அறிமுகமாகியிருக்கிறார்.

இதை 'சன் பிக்சர்ஸ்' தயாரிக்க, ரத்தம் தெறிக்க படங்களை பண்ணும் அருண் மாதேஸ்வரன் தான் இயக்கியிருக்கிறார். இதில் லோகேஷ் கனகராஜுக்கு ஜோடியாக வாமிகா கபி வலம் வந்துள்ளார்.

இந்த படத்துக்கு டாப் இசையமைப்பாளர்களில் ஒருவரான அனிருத் ரவிச்சந்தர் இசையமைத்திருக்கிறார். இப்படம் பல ஆக்ஷன் காட்சிகளுடன் விறுவிறுப்பாக செல்கிறது என்றே பார்த்த அனைவரின் விமர்சனமாக இருக்கிறது.

பாக்ஸ் ஆபிஸில் இந்த படம் இப்படி ஒரு வசூலை குவிக்கும் என்று யாருமே எதிர்பார்க்கவில்லை. ஆம். கடந்த 8 நாட்களில் உலக அளவில் ரூ.70.23 கோடி வசூல் செய்து சாதனை படைத்துள்ளது.

From Around the web