DC ஹீரோயின் வாமிகா கபியின் சொத்து மதிப்பு இத்தனை கோடியா?
Aug 11, 2026, 18:53 IST
ஹிந்தி மற்றும் பஞ்சாபி மொழியில் பல படங்களில் நடித்தவர் வாமிகா கபி. இவரை தமிழுக்கு அழைத்து வந்து 'மாலை நேரத்து மயக்கம்' படத்தில் அறிமுகப்படுத்தினார் கீதாஞ்சலி செல்வராகவன்.
அதன் பிறகு எஸ்.ஜே.சூர்யாவின் 'இறவாக்காலம்' படத்தில் நடித்தார். அஸ்வின் சரவணன் இயக்கிய இப்படம் பல வருடங்களாக ரிலீஸ் ஆகாமல் சிக்கிக் கொண்டது.
இந்நிலையில், வாமிகா நடித்துள்ள புதிய தமிழ் படமான 'டிசி' கடந்த வாரம் தான் உலகமெங்கும் வெளியானது. இதில் ஹீரோவாக இயக்குநர் லோகேஷ் கனகராஜ் நடித்திருக்கிறார்.
அருண் மாதேஸ்வரன் இயக்கியுள்ள இந்த படத்தில் வாமிகாவின் நடிப்பை அனைவரும் பாராட்டிக் கொண்டிருக்கிறார்கள். தற்போது, நடிகை வாமிகா கபியின் சொத்து மதிப்பு ரூ.25 கோடி என்று தகவல் கிடைத்திருக்கிறது.