ஆந்திரா & தெலுங்கானாவில் DCயின் நிலைமை என்ன?
Aug 13, 2026, 18:29 IST
தமிழில் 'கைதி, லியோ, விக்ரம், கூலி' போன்ற பல படங்களை இயக்கிய இயக்குநர் லோகேஷ் கனகராஜ், 'டிசி' மூலம் ஹீரோவாக மாறி விட்டார்.
'சன் பிக்சர்ஸ்' நிறுவனம் தயாரித்துள்ள இந்த படத்தை அருண் மாதேஸ்வரன் இயக்கியிருக்கிறார். ஆக்ஷன் விரும்பிகளுக்கு பிடித்த மாதிரி இருப்பதால், பாக்ஸ் ஆபிஸில் பட்டையை கிளப்பி வருகிறது.
இப்படத்தை தெலுங்கிலும் டப் செய்து வெளியிட்டிருக்கிறார்கள். அங்கு ஆந்திரா மற்றும் தெலுங்கானாவிலும் ரசிகர்கள் கொண்டாடி வருகிறார்கள்.
கடந்த 6 நாட்களில் ஆந்திரா & தெலுங்கானாவில் மட்டும் ரூ.12.05 கோடி வசூலித்து கெத்து காட்டியுள்ளது. லோகேஷ் கனகராஜ் இயக்கப்போகும் புதிய படத்தில் தெலுங்கு நடிகர் அல்லு அர்ஜுன் ஹீரோவாக நடிக்கப்போவது குறிப்பிடத்தக்கது.