Blast வசூலை முறியடித்ததா DC?
Aug 10, 2026, 14:41 IST
இந்த ஆண்டு (2026) மே மாதத்தில் ரிலீஸ் ஆன ஆக்ஷன் படம் தான் 'பிளாஸ்ட்'. நம்ம 'ஆக்ஷன் கிங்' அர்ஜுன் தான் இதில் ஹீரோ.
புதுமுக இயக்குநர் சுபாஷ்.கே.ராஜ் டைரக்ட் பண்ண இந்த படம் சூப்பர் ஹிட்டானது. இதன் முதல் 3 நாட்களின் வசூல் உலக அளவில் ரூ.13.18 கோடி தான்.
தற்போது, கடந்த ஆகஸ்ட் 7-ஆம் தேதி வெளியான ஆக்ஷன் படமான 'DC' மூன்றே நாட்களில் உலக அளவில் ரூ.31.86 கோடி வசூலித்து 'பிளாஸ்ட்' வசூலை முறியடித்து விட்டது.
'டிசி'-யில் ஹீரோவாக நடித்திருப்பது இயக்குநர் லோகேஷ் கனகராஜ் தான். இதில் அவருக்கு ஜோடியாக வாமிகா கபி நடிக்க, இதை இயக்கியுள்ளார் அருண் மாதேஸ்வரன்.