தாய் கிழவி, பராசக்தி எல்லாம் பஞ்சர் தான் போல!.. 4 நாட்களில் ‘டிசி’ அதிகாரப்பூர்வ வசூல் இதோ!..
லோகேஷ் கனகராஜ் நடிகராக அறிமுகமாகியுள்ள ‘DC’ திரைப்படம் திரையரங்குகளில் வெளியான நான்கு நாட்களிலேயே உலகளவில் ரூ.50 கோடி வசூலை நெருங்கியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்தியாவில் மட்டும் நான்கு நாட்களில் சுமார் ரூ.30 கோடி வசூலை பதிவு செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
லோகேஷ் கனகராஜுக்கு ஜோடியாக வாமிகா கபி நடித்துள்ள இப்படத்தை அருள் மாதேஸ்வரன் இயக்கியுள்ளார். மேலும், இப்படத்தில் காதல், ஆக்ஷன் மற்றும் த்ரில்லர் இணைத்து உருவாக்கப்பட்டுள்ளது. சன் பிக்சர்ஸ் தயாரித்துள்ள இப்படத்திற்கு அனிருத் ரவிச்சந்தர் இசையமைத்துள்ளார்.

முதல் நாளில் இந்தியாவில் ரூ.4.40 கோடி வசூல் செய்த ‘DC’, இரண்டாம் நாளில் ரூ.7 கோடியும், மூன்றாம் நாளில் ரூ.9.55 கோடியும் வசூலித்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன. ஞாயிற்றுக்கிழமை வசூலில் ஏற்பட்ட உயர்வு, படத்திற்கு கிடைத்த நேர்மறையான வரவேற்பை காட்டுவதாக கூறப்படுகிறது.
இயக்குநராக பல வெற்றிகளை பதிவு செய்த லோகேஷ் கனகராஜ், தற்போது நடிகராகவும் கவனம் பெற்றுள்ள நிலையில், ‘DC’ திரைப்படத்தின் வசூல் அவருடைய திரைப்பயணத்தில் மற்றொரு முக்கிய மைல்கல்லாக மாறியுள்ளது.இதே வேகத்துடன் டிசி படம் திரையரங்குகளில் தொடர்ந்து ஓடினால், தாய் கிழவி, பராசக்தி படங்களின் வசூலை எல்லாம் பின்னுக்குத்தள்ளும் என எதிர்பார்க்கப்படுகிறது.