ஹீரோவான முதல் படமான DC-லேயே வசூல் மன்னனான லோகேஷ் கனகராஜ்!

 
DC

'மாநகரம்' என்ற சின்ன பட்ஜெட் படத்தை தரமாக இயக்கி அறிமுகமான லோகேஷ் கனகராஜுக்கு, அடுத்தடுத்து 'கைதி, மாஸ்டர், விக்ரம், லியோ, கூலி' என அமைந்தது எல்லாமே பெரிய பட்ஜெட் படங்களின் வாய்ப்புகள் தான்.

ஆல்ரெடி தயாரிப்பாளர் ஆகவும் மாறி இருக்கும் லோகேஷை, நேற்று (ஆகஸ்ட் 7-ஆம் தேதி) திரையரங்குகளில் ரிலீஸ் ஆன 'டிசி' (DC) படத்தில் ஹீரோவாக்கி கையில் துப்பாக்கியை கொடுத்து அழகு பார்த்திருக்கிறார் இயக்குநர் அருண் மாதேஸ்வரன்.

 இதில் வாமிகா கபி தான் லோகேஷுக்கு ஜோடி. இவர்கள் இருவருமே நடிப்பில் அசத்தி விட்டார்கள். இதற்கு அனிருத்தின் இசை பெரிய பலமாக இருந்துள்ளது.

இப்படம் ரசிகர்களிடையேவும், விமர்சன ரீதியாகவும் பாராட்டை குவித்து வருகிறது. தற்போது, இதன் முதல் நாள் வசூல் உலக அளவில் ரூ.5.70 கோடி என்று தகவல் வெளியாகியுள்ளது. ஹீரோவாக அறிமுகமாகியிருக்கும் முதல் படத்திலேயே லோகேஷ் வசூல் மன்னனாக ஆகி விட்டாரே என்று கோலிவுட்டில் ஆச்சர்யமாக பார்க்கிறார்கள்.

From Around the web