அனிருத் ரசிகர்களின் ப்ளேலிஸ்ட்டில் இடம்பிடித்த லோகேஷ் கனகராஜின் 'DC' பாடல்கள்!
இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இயக்கிய ஆக்ஷன் படங்களை பார்த்த ஆடியன்ஸுக்கு அடுத்த சர்ப்ரைஸாக, அவரே துப்பாக்கியை எடுத்துக் கொண்டு நடிகராக களமிறங்கியுள்ள படம் தான் 'டிசி' (DC).
இதில் கதாநாயகியாக வாமிகா கபி நடித்திருக்கிறார். அருண் மாதேஸ்வரன் இயக்கியுள்ள இந்த படத்துக்கு அனிருத் ரவிச்சந்தர் தான் இசை. 'சன் பிக்சர்ஸ்' கலாநிதி மாறன் தான் தயாரித்திருக்கிறார்.
படம் வருகிற ஆகஸ்ட் 7-ஆம் தேதி திரைக்கு வருகிறது. சமீபத்தில், இதன் ட்ரெய்லர் கேன்ஸ் திரைப்பட விழாவில் வெளியிடப்பட்டு பெரிய வரவேற்பினை பெற்றது. ஆல்ரெடி இப்படத்தின் 5 பாடல்கள் வெளியானது.
#DC Album is all yours ❤️❤️❤️#XV
— Anirudh Ravichander (@anirudhofficial) July 24, 2026
🎵 https://t.co/DEnjsWlrEE #DC releasing worldwide August 7th
Love you all 🤗🤗🤗@Dir_Lokesh @ArunMatheswaran @sunpictures #WamiqaGabbi @isanjkayy @mukesh_DOP @editor_prasanna @skannanartdir @PC_stunts @kabilanchelliah @kuchirayar73… pic.twitter.com/5wYUEKKrq5
இன்னும் 10 சேர்த்து படத்தில் மொத்தம் 15 பாடல்களாம். இன்று இசை வெளியீட்டு விழா சென்னையில் நடைபெறுகிறது. தற்போது, அனைத்து பாடல்களையும் அனிருத் எக்ஸ் தளத்தில் வெளியிட்டுள்ளார்.
