கேரளாவில் மட்டுமே இத்தனை கோடி கல்லா கட்டியுள்ளதா DC?
Aug 17, 2026, 20:27 IST
பெரிய ஹீரோக்கள், பெரிய இயக்குநர்கள் படங்களை விட சிலநேரங்களில் புதுமுக நடிகர்கள், இயக்குநர்களின் படங்கள் அதிக வசூல் செய்து நம்மை ஆச்சரியப்படுத்தும்.
இந்த லிஸ்ட்டில் சேர்ந்துள்ள படம் தான் 'டிசி'. நம்ம பிரபல இயக்குநர் லோகேஷ் கனகராஜ் தான் இதில் ஹீரோவாக அறிமுகமாகி இருக்கிறார். அவருக்கு ஜோடியாக வாமிகா நடித்துள்ளார்.
இந்த படத்தை 'கேப்டன் மில்லர், ராக்கி' படங்களின் இயக்குநர் அருண் மாதேஸ்வரன் இயக்கியிருக்கிறார். இப்படம் வெளியான நாளிலிருந்தே, தமிழ்நாட்டில் மட்டுமின்றி உலக அளவிலும் அதிக வசூல் செய்து வருகிறது.
கடந்த 10 நாட்களில் இந்த படம் கேரளாவில் மட்டும் ரூ.16.45 கோடி வசூல் செய்து மாஸ் காட்டியுள்ளது. ஒரு புதுமுக நடிகரின் தமிழ் படத்துக்கு, கேரளாவில் இவ்ளோ வரவேற்பா என்று கோலிவுட் வட்டாரம் ஆச்சரியப்படுகிறது.