வெளியானது லோகேஷ் கனகராஜின் 'DC' படத்தின் 'Bum Baa Diga Diga' பாடல்!
வழக்கமாக ஆக்ஷன் படங்களாக இயக்கி நம்மை குஷி படுத்துவார் இயக்குநர் லோகேஷ் கனகராஜ். இந்த முறை அப்படி ஒரு படத்தில் அவரே ஹீரோவாக நடித்திருக்கிறார்.
படத்தின் பெயர் டிசி (DC). இயக்குநர் சீட்டில் அமர்ந்து இதை இயக்கியிருப்பவர் அருண் மாதேஸ்வரன். இந்த படத்தை 'சன் பிக்சர்ஸ்' கலாநிதி மாறன் தான் தயாரித்திருக்கிறார்.
இதில் லோகேஷுக்கு ஜோடியாக வாமிகா கபி நடித்திருக்கிறார். அனிருத் இசையில் ஆல்ரெடி ரிலீஸ் ஆன 'HANGOVA' பாடல் ரசிகர்களிடம் லைக்ஸை அள்ளியது.
Tham tharikida thithithom, Yudham murugana sabhdham thom!🧨🔥
— Sun Pictures (@sunpictures) July 18, 2026
Volume up and feel the rush. #BumBaaDigaDiga is out now! #DC
▶️ https://t.co/3WOQMN2LS0@Dir_Lokesh @ArunMatheswaran @anirudhofficial #WamiqaGabbi @isanjkayy #Vedan @mukesh_DOP @editor_prasanna @skannanartdir… pic.twitter.com/9xqOahGCVc
தற்போது, 'Bum Baa Diga Diga' என்ற பாடலை ரிலீஸ் செய்துள்ளனர். படத்தை வருகிற ஆகஸ்ட் 7-ஆம் தேதி தமிழ், ஹிந்தி, தெலுங்கு ஆகிய 3 மொழிகளிலும் ரிலீஸ் செய்யத் திட்டமிட்டிருக்கிறார்கள்.
