லோகேஷ் கனகராஜ் ஹீரோவாக நடிக்கும் 'DC'... அனிருத் இசையில் வெளியானது 'HANGOVA' பாடல்!

 
Dc hangova song

'மாஸ்டர், விக்ரம், கூலி' என டாப் ஹீரோஸை வைத்து பெரிய படங்கள் பண்ணி இயக்குநராக மாஸ் காட்டி வந்த லோகேஷ் கனகராஜ், 'DC' படம் மூலம் ஹீரோவாகியிருக்கிறார்.

'சன் பிக்சர்ஸ்' நிறுவனம் மூலம் கலாநிதி மாறன் தயாரித்திருக்கும் இந்த படம் வருகிற ஜூலை மாதம் 31-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவிருக்கிறது. ஆக்ஷன் த்ரில்லர் ஜானர் படமான இதை 'ராக்கி' புகழ் இயக்குநர் அருண் மாதேஸ்வரன் இயக்கியிருக்கிறார்.

தற்போது, அனிருத் ரவிச்சந்தர் இசையில் 'HANGOVA' என்ற பாடலை ரிலீஸ் செய்துள்ளனர். இப்பாடல் ரசிகர்களிடம் அதிக லைக்ஸ் குவித்து வருகிறது.

இதில் ஹீரோயினாக வாமிகா கபி நடிக்க, முக்கிய ரோல்களில் சஞ்சனா கிருஷ்ணமூர்த்தி, அவினாஷ் ரகுதேவன், ஜவஹர் சக்தி, சரத் ரவி, கஸ்தூரி ராஜா ஆகியோர் நடித்துள்ளனர். இந்த படத்துக்கு முகேஷ் ஒளிப்பதிவு செய்துள்ளார்.

From Around the web