திரையரங்கில் 'DC'-ங்குற ஆக்ஷன் சரவெடியை கொளுத்திப் போட நாள் குறித்த லோகேஷ் கனகராஜ்

 
Lokesh kanagaraj dc

தமிழ் சினிமாவின் உச்ச நட்சத்திரங்களான 'சூப்பர் ஸ்டார்' ரஜினிகாந்த், 'உலக நாயகன்' கமல்ஹாசன், 'தளபதி' விஜய் மூவரையும் வைத்து படம் எடுத்தவர் தான் இயக்குநர் லோகேஷ் கனகராஜ்.

இவர் அடுத்ததாக அல்லு அர்ஜுனை வைத்து 'AA23' படத்தை இயக்கவிருக்கிறார். இதன் படப்பிடிப்பு விரைவில் துவங்கவிருக்கிறது. இதற்கிடையில் ஹீரோவாக 'DC' என்ற படத்தில் நடித்து முடித்து விட்டார் லோகேஷ் கனகராஜ்.

இப்படத்தை வருகிற ஜூலை மாதம் 31-ஆம் தேதி வெளியிட இதன் தயாரிப்பாளர் 'சன் பிக்சர்ஸ்' கலாநிதி மாறன் முடிவெடுத்துள்ளாராம். லோகேஷ் கனகராஜுக்கு மிகவும் பிடித்த ஆக்ஷன் த்ரில்லர் ஜானரில் தான் இந்த படமும் உருவாகியிருக்கிறது.

'ராக்கி' புகழ் இயக்குநர் அருண் மாதேஸ்வரன் இயக்கியுள்ள இதில் ஹீரோயினாக வாமிகா கபி நடித்திருக்கிறார். அனிருத் இசையமைத்திருக்கும் இதற்கு முகேஷ் ஒளிப்பதிவு செய்திருக்கிறார்.

From Around the web