லோகேஷ் கனகராஜின் DC படத்தோட Runtime என்ன தெரியுமா?

 
Dc

லோகேஷ் கனகராஜ் - வாமிகா கபி ஜோடியாக நடித்துள்ள புதிய படம் 'டிசி' (DC). இதை 'ராக்கி' இயக்குநர் அருண் மாதேஸ்வரன் இயக்கியிருக்கிறார்.

ரொமான்டிக் ஆக்ஷன் த்ரில்லர் ஜானர் படமான இதற்கு அனிருத் தான் இசை. கலாநிதி மாறனின் 'சன் பிக்சர்ஸ்' நிறுவனம் தான் தயாரித்திருக்கிறது. 

ஆல்ரெடி இதன் 2 ட்ரெய்லர்கள் மற்றும் 15 பாடல்கள் ரிலீஸ் ஆகி ரசிகர்களிடம் அமோக வரவேற்பினை பெற்றது. படம் வர்ற ஆகஸ்ட் 7-ஆம் தேதி வெளியாகப் போகிறது.

இதுவரை இயக்குநராக வலம் வந்து 'மாநகரம், கைதி, விக்ரம், லியோ' போன்ற சூப்பர் ஹிட் படங்களை கொடுத்த லோகேஷ் கனகராஜ் ஹீரோவாக நடிக்கும் முதல் படம் என்பதால், பெரிய எதிர்பார்ப்பு உள்ளது. தற்போது, இந்த படத்தோட Runtime 2 hrs 23 mins என்று 'சன் பிக்சர்ஸ்' நிறுவனம் எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளனர்.

From Around the web