DCயின் வெற்றிக்கு இதுதான் காரணமா?
Aug 12, 2026, 09:05 IST
இயக்குநர் லோகேஷ் கனகராஜ் ஹீரோ அவதாரம் எடுத்துள்ள படம் தான் 'டிசி'. கடந்த ஆகஸ்ட் 7-ஆம் தேதி வெளியான இதை 'சாணிக் காயிதம்' இயக்குநர் அருண் மாதேஸ்வரன் தான் இயக்கியுள்ளார்.
ஆல்ரெடி நாம் பார்த்து பழகிய ஒரு கதையை மீண்டும் கையில் எடுத்து, இயக்குநர் அருண் மாதேஸ்வரன் அவருடைய ஸ்டைலில் இதை திரைக்கதையாக்கி, இசையமைப்பாளர் அனிருத் உள்ளிட்ட மற்ற டெக்னீஷியன்களின் ஒத்துழைப்பால் மேக்கிங்கில் முழு படத்தையும் ரசிக்கும் வகையில் கொடுத்து விட்டார்.
இதுதான் இப்படத்தின் வெற்றிக்கு காரணம். ரசிகர்களுக்கு ஆக்ஷன் ட்ரீட்டாக அமைந்திருக்கும் இதன் பாக்ஸ் ஆபிஸ் கலெக்ஷன் பற்றி தகவல் கிடைத்திருக்கிறது.
கடந்த ஐந்து நாட்களிலேயே ரூ.51.71 கோடி வசூல் செய்து சாதனை படைத்துள்ளது. நடிகராக லோகேஷுக்கு கிடைத்திருக்கும் இந்த வெற்றியை பார்த்து சக இயக்குநர்கள் பலர் பாராட்டி வருகிறார்கள்.