கேன்ஸ் படவிழாவில் வெளியாகும் லோகேஷ் கனகராஜின் டிசி டிரைலர்!

 
கேன்ஸ் படவிழாவில் வெளியாகும் லோகேஷ் கனகராஜின் டிசி டிரைலர்!

தமிழ் சினிமாவில் முன்னணி இயக்குனர்களில் முக்கியமானவர் லோகேஷ் கனகராஜ். மாநகரம் படம் மூலம், அறிமுகம் ஆன அவர் குறுகிய காலத்திலேயே விஜய் , கமல்ஹாசன், ரஜினி , கார்த்தி என முன்னணி நடிகர்களின் படங்களை இயக்கியுள்ளார். குறிப்பாக இவர் இயக்கிய விக்ரம் படம் கமல்ஹாசனுக்கே பெரிய கம்பேக்காக அமைந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

லோகேஷ் கனகராஜ் தற்போது இயக்குனராக மட்டுமின்றி நடிகராகவும் அறிமுகம் ஆக உள்ளார். சன் பிச்சர்ஸ் தயாரிக்கும் டிசி என்ற படத்தில் நாயகனாக நடித்து வருகிறார். சாணி காகிதம் , கேப்டன் மில்லர் போன்ற படங்களை இயக்கிய அருண் மாதேஸ்வரன் இப்படத்தினை இயக்குகிறார்.

இந்த நிலையில் டிசி படத்தின் டிரைலர் குறித்த தகவல்கள் வெளிவந்துள்ளது. வருகிற மே15ம் தேதி நடைபெறும் கேன்ஸ் திரைப்பட விழாவில் டிசி படத்தின் டிரைலர் வெளியிட படக்குழு முடிவு செய்துள்ளது.

From Around the web