லோகேஷ் கனகராஜ் DC டிரைலர் அப்டேட்
லோகேஷ் கனகராஜ் நடித்த DC படத்தின் டிரைலர் குறித்த அப்டேட்டை படக்குழு இன்று வெளியிட்டுள்ளது.
Jul 29, 2026, 21:29 IST
லோகேஷ் கனகராஜ் நடித்த DC படத்தின் டிரைலர் குறித்த அப்டேட்டை படக்குழு இன்று வெளியிட்டுள்ளது.
தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குனர்களில் ஒருவர் லோகேஷ் கனகராஜ். இவர் தற்போது இயக்குனராக மட்டுமல்லாமல் நடிகராகவும் அறிமுகம் ஆகிறார். இவர் கதையின் நாயகனாக அறிகும ஆகும் படம் டிசி. சாணி காகிதம், கேப்டன் மிலல்ர் உள்ளிட்ட சில படங்களை இயக்கிய அருண் மாதேஸ்வரன் இயக்கும் இப்படத்தில் நாயகியாக வாமிகா கபி நடித்துள்ளார். முக்கிய வேடத்தில் லப்பர் பந்து புகழ் சஞ்சனா கிருஷ்ண மூர்த்தி நடித்துள்ளார்.
சன் பிச்சர்ஸ் அதிக பொருட்செலவில் தயரித்துள்ள இந்த படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார்.
இந்த நிலையில் டிசி படத்தின் டிரைலர் நாளை மாலை 6 மணிக்கு வெளியாகிறது. இது குறித்த தகவலை படக்குழு உறுதிப்படுத்தியுள்ளது.
