1. Home
  2. Latest News

தீயா இருக்கு!.. வேறலெவல் லுக்கில் லோகேஷ் கனகராஜ்!.. DC டைட்டில் டீசர் வீடியோ!...

dc

டிசி டிரெய்லர் வீடியோ

மாநகரம் படம் மூலம் இயக்குனராக அறிமுகமானவர் லோகேஷ் கனகராஜ். அதன்பின் அவர் இயக்கிய கைதி திரைப்படம் அவரை இளைஞர்களிடம் பிரபலமாக்கியது. இந்த படத்திற்கு அவர் அமைத்திருந்த திரைக்கதை பலராலும் பாராட்டப்பட்டது. அதன்பின் மாஸ்டர், விக்ரம் ஆகிய படங்களை இயக்கினார்.

லோகேஷ் இயக்கும் படங்களை ரசிகர்கள் LCU என கொண்டாட துவங்கினார்கள். அதிரடி ஆக்‌ஷன், கேங்ஸ்டர்களை இயக்குவதால் இளைஞர்களுக்கு பிடித்த இயக்குனராக லோகேஷ் மாறினார். மீண்டும் விஜயை வைத்து லியோ படத்தை எடுத்தார். இப்படம் கலவையான விமர்சனங்களை பெற்றது. அடுத்து ரஜினியை வைத்து அவர் இயக்கிய கூலி படம் பெரிய அளவில் எதிர்பார்க்கப்பட்டது.

ஆனால், அப்படம் ரசிகர்களை முழுமையாக திருப்திப்படுத்தவில்லை. இந்நிலையில்தான், நடிகர் அவதாரம் எடுத்திருக்கிறார் லோகேஷ். சாணி காயிதம், ராக்கி, கேப்டன் மில்லர் ஆகிய படங்களை இயக்கிய அருண் மாதேஸ்வரன் இப்படத்தை இயக்கி வருகிறார். சன் பிக்சர்ஸ் நிறுவனம் இப்படத்தை தயாரித்து வருகிறது.

இந்நிலையில், இப்படத்தின் டைட்டில் டீசரை படக்குழு தற்போது வெளியிட்டிருக்கிறது. ரத்தக்கறை உள்ள முகத்தோடு கையில் கத்தியோடு லோகேஷ் விபச்சார பெண் ஒருவரை தேடி செல்வது போல காட்சிகள் இடம் பெற்றிருக்கிறது. படத்திற்கு DC என தலைப்பு வைக்கப்பட்டிருக்கிறது. இப்படத்திற்கு அனிருத் இசையமைத்திருக்கிறார்.


கட்டுரையாளர்கள்

CineReporters Team

CineReporters Team

Editorial Team Member

info@cinereporters.com

உங்கள் நம்பிக்கைக்குரிய பொழுதுபோக்கு செய்தி, திரைப்பட விமர்சனம் மற்றும் பிரபலங்களின் அப்டேட்ஸுக்கான தளம். சினிமா உலகின் சமீபத்திய தகவல்களை உங்களுக்காக கொண்டு வருகிறது.