Categories: Cinema News latest news

‘ரஜினி 171’ கதை என்னனு தெரியும்! ஸ்கிரிப்ட்டில் ஏகப்பட்ட குறைகள் – ஐய்யோ தலைவா! இது என்ன சோதனை?

Rajini 171: தமிழ் சினிமாவில் ஒரு தவிர்க்க முடியாத இயக்குனராக மாறியிருக்கிறார் இயக்குனர் லோகேஷ் கனகராஜ். பல முன்னணி இயக்குனர்களை ஒட்டுமொத்தமாக தன் பக்கம் திரும்ப பார்க்க வைத்தவர். இவரின் டைரக்‌ஷன் பல பேரை ஆச்சரியப்பட வைத்திருக்கிறது.

அந்த வகையில் மிகவும் பிரமிப்பில் இருப்பவர் இயக்குனர் லிங்குசாமி. அவர் சமீபத்தில் ஒரு பேட்டியில் லோகேஷை பற்றியும் அவருடைய திறமையைப் பற்றியும் கூறினார். அதுமட்டுமில்லாமல் இப்பொழுது இருக்கும் இளம் தலைமுறை இயக்குனர்களை பற்றியும் தன் புரிதலை வெளிப்படுத்தினார்.

இதையும் படிங்க: ஒன்னு சேர்ந்து இப்படி ஒரு முடிவ எடுத்துட்டாங்களே! சூர்யா குடும்பம் எடுத்த முடிவால் அதிர்ச்சியில் கோடம்பாக்கம்

லோகேஷ் கனகராஜ் ஆரம்பத்தில் இருந்தே அவருடைய கதைகளை லிங்குசாமியிடம் கலந்தாலோசிப்பாராம்.அதே போலதான் லியோ படத்தின் கதையையும் லிங்குசாமியிடம் கூறியிருக்கிறார். ரிலீஸூக்கு முன்பாகவே லியோ படத்தின் மொத்த கதையும் ஸ்கிரீன் டு ஸ்கிரீன் லிங்குசாமிக்கு தெரியுமாம்.

சின்ன சின்ன ஐடியாக்களையும் லிங்குசாமி லியோ படத்திற்காக கொடுத்தாராம். ஆனால் ஸ்கிரிப்ட்டில் பல குறைகள் இருந்ததும் லிங்குசாமிக்கு தெரியுமாம். அதே போல் எவ்வளவு குறைகள் இருந்தாலும் லியோ படம் கண்டிப்பாக இவ்வளவு வசூல் பெறும் என்பதை பற்றியும் அறிந்து வைத்திருந்தாராம் லிங்குசாமி.

இதையும் படிங்க: காஜி ரசிகர்களுக்கு நல்ல விருந்து!.. தூக்கலான கிளாமரில் சொக்க வைக்கும் மாளவிகா!…

அதே போல்தான் நடந்தது என்று கூறினார். அதுமட்டுமில்லாமல் லோகேஷ் அடுத்ததாக ரஜினியை வைத்துதான் படம் பண்ண இருக்கிறார். அந்தப் படத்தின் கதையும் தனக்கு முழுவதுமாக தெரியும் என்று லிங்குசாமி கூறினார். அதற்கும் அவருடைய சில ஆலோசனைகளை வழங்கியிருக்கிறாராம் லிங்குசாமி.

இதை பார்த்த ரசிகர்கள் தலைவர் படத்தை லியோ படம் மாதிரி சொதப்பாமல் இருந்தால் சரி என்று தங்களுடைய கருத்துக்களை கூறிவருகிறார்கள்.

இதையும் படிங்க: வாடிவாசலை விட முடியாத சூர்யா.. அமீரை விட முடியாத வெற்றிமாறன்.. என்னப்பா நடக்குது..!

Published by
Rohini