1. Home
  2. Latest News

Kantara 2: 500 கோடி வசூலை தாண்டிய காந்தாரா 2!... லோகேஷ் இவர்கிட்ட கத்துக்கணும்!...

lokesh
காந்தாரா 2 படத்தின் வசூல் என்னவென பார்ப்போம்...

Kantara Chapter 1

கன்னட நடிகர் மற்றும் இயக்குனர் ரிசப் ஷெட்டி எழுதி, இயக்கி நடித்து 2022ம் ஆண்டு வெளியான காந்தாரா திரைப்படம் கன்னட மொழி படமாக இருந்தாலும் தமிழ், தெலுங்கு, ஹிந்தி ஆகிய மொழிகளிலும் டப் செய்யப்பட்டு வெளியாகி ரசிகர்களின் பேராதரவோடு சூப்பர் ஹிட் அடித்தது. 16 கோடி பட்ஜெட்டில் உருவான படம் 400 கோடி வரை வசூல் செய்து சாதனை படைத்தது. கர்நாடகாவில் உள்ள காடுகளில் வசிக்கும் பழங்குடியினர் மக்களின் வாழ்க்கை, அவர்களின் வாழ்வியல் முறை, அவர்களை ஏமாற்றும் அரசியல்வாதிகள், அவர்களை காக்கும் பஞ்சுருளி கடவுள் ஆகியவற்றை அடிப்படையாக வைத்து இப்படத்தை உருவாக்கி இருந்தார் ரிசப் ஷெட்டி.

முதல் பாகம் ஹிட் கொடுத்த நம்பிக்கையில் இரண்டாம் பாகத்தை Kantara Chapter 1 என்கிற தலைப்பில் உருவாக்கினார் ரிசப் ஷெட்டி இந்த படத்திலும் அவரே ஹீரோவாக நடிக்க அவருக்கு ஜோடியாக மதராஸி புகழ் ருக்மணி வசந்த் நடித்திருந்தார். மேலும் ஜெயராம் குல்சன் தேவையா உள்ளிட்ட பலரும் நடித்திருந்தனர்.

கடந்த 2ம் தேதி படம் உலகமெங்கும் வெளியானது. வெளியான முதல் நாளில் இருந்தே படத்திற்கு பாசிடிவ் ஆன விமர்சனங்கள் வந்தது. குறிப்பாக படத்தின் சண்டைக் காட்சிகள், போர் காட்சிகள், பஞ்சுருளி தெய்வம் காட்டப்பட்ட விதம் ஆகியவை படத்தின் வெற்றிக்கு பெரிய அளவில் உதவியது. குறிப்பாக இப்படத்தில் இடம் பெற்றிருந்த VFX காட்சிகள் மிகவும் சிறப்பாக அமைக்கப்பட்டிருந்தது .தமிழகத்தில் உள்ள சில தியேட்டர்களில் சிலர் பஞ்சுருளி தெய்வம் போல வேஷம் அணிந்து நடனமாடிய வீடியோக்கள் சமூக வலைத்தளங்களில் வெளியானது.

இந்நிலையில் படம் வெளியாகி 8 நாட்கள் ஆகிவிட்ட நிலையில் காந்தாரா 2 திரைப்படம் 509.25 கோடி வசூல் செய்திருப்பதாக தயாரிப்பு நிறுவனமே அதிகாரப்பூர்வமாக அறிவித்திருக்கிறது
. எப்படியும் தீபாவளி வரை இப்படம் மேலும் 200 கோடி வரை வசூல் செய்யலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

விக்ரம், மாஸ்டர், லியோ ஆகிய படங்கள் மூலம் முக்கிய இயக்குனராக பார்க்கப்பட்ட லோகேஷ் கனகராஜ் இயக்கிய கூலி திரைப்படம் 1000 கோடி வசூலை அடிக்கும் என பலரும் எதிர்பார்த்த நிலையில் அப்படம் 500 கோடி மட்டுமே வசூல் செய்தது. ஆனால் காந்தாரா 2 திரைப்படம் 700 கோடி வசூலை தாண்டும் என எதிர்பார்க்கப்படுகிறது. ரசிகர்களுக்கு பிடிக்கும் வகையில் ஒரு பேன் இண்டியா திரைப்படத்தை எப்படி எடுக்க வேண்டும் என்பதை ரிசப் ஷெட்டியிடம் லோகேஷ் கனகராஜ் கற்றுக்கொள்ள வேண்டும் என பலரும் சமூக வலைதளங்களில் பதிவிட்டு வருகிறார்கள்.

 

கட்டுரையாளர்கள்

CineReporters Team

CineReporters Team

Editorial Team Member

info@cinereporters.com

உங்கள் நம்பிக்கைக்குரிய பொழுதுபோக்கு செய்தி, திரைப்பட விமர்சனம் மற்றும் பிரபலங்களின் அப்டேட்ஸுக்கான தளம். சினிமா உலகின் சமீபத்திய தகவல்களை உங்களுக்காக கொண்டு வருகிறது.