×

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் சூர்யா - அட்டா இது செம கூட்டணி...

 
lokesh

தமிழ் சினிமாவில் மணிரத்னம், ஷங்கர், வெற்றிமாறன், கவுதம்மேனன், லிங்குசாமி உள்ளிட்ட 10 இயக்குனர்கள் இணைந்து Rain on Films என்கிற தயாரிப்பு நிறுவனத்தை துவங்கியுள்ளனர். இந்த நிறுவனம் மூலம் சிறிய பட்ஜெட் உள்ளிட்ட திரைப்படங்களை அவர்கள் தயாரிக்க திட்டமிட்டுள்ளனர்.

lokesh

முதன் முதலாக இவர்கள் தயாரிக்கும் படத்தை லோகேஷ் கனகராஜ் இயக்கவுள்ளார். இதில் நடிகர் சூர்யா நடிக்கவுள்ளார். சூர்யாவின் தம்பி கார்த்தியை வைத்து ‘கைதி’ திரைப்படத்தை இயக்கியவர் லோகேஷ் கனகராஜ் தற்போது அவரின் அண்ணனை இயக்கவுள்ளார். மாஸ்டர் படத்திற்கு பின் கமல்ஹாசன், விஜய்சேதுபதி, பகத் பாசிலை வைத்து ‘விக்ரம்’ திரைப்படத்தை அவர் இயக்கி வருகிறார்.

lokesh

அதேபோல், சூர்யாவின் கையிலும் சில திரைப்படங்கள் இருக்கிறது. பாண்டிராஜ் இயக்கத்தில் ‘எதற்கும் துணிந்தவன்’ படப்பிடிப்பு தற்போது நடைபெற்று வருகிறது. இப்படத்திற்கு பின் வெற்றிமாறன் இயக்கத்தில் ‘வாடிவாசல்’ திரைப்படத்தில் அவர் நடிக்கவுள்ளார். அதன்பின் அவர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் அவர் நடிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.

directors

From around the web

Trending Videos

Tamilnadu News