லோகேஷ் கனகராஜுக்கு அந்த போஸ்ட் கிடைக்குமா?.. முதல்வர் விஜய்யை சந்தித்த டிசி ஹீரோ!..
தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குநர்களில் ஒருவரான லோகேஷ் கனகராஜ் சமீபத்தில் தமிழக முதலமைச்சரும் நடிகருமான விஜய் அவர்களை நேரில் சந்தித்த புகைப்படம் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாக பரவி ரசிகர்களிடையே பெரும் பேசுபொருளாக மாறியுள்ளது.
‘மாஸ்டர்’, ‘லியோ’ போன்ற வெற்றி திரைப்படங்களின் மூலம் விஜய் மற்றும் லோகேஷ் கூட்டணி ரசிகர்களிடையே மிகப்பெரிய வரவேற்பைப் பெற்றது. ‘கைதி’, ‘விக்ரம்’, ‘லியோ’ போன்ற படங்களின் மூலம் ஆக்ஷன் மற்றும் திரைக்கதை அமைப்பில் தனக்கென தனி முத்திரை பதித்துள்ள லோகேஷ் கனகராஜ், தற்போது இந்திய அளவிலான இயக்குநராக உயர்ந்துள்ளார்.

மேலும், இயக்குனர் லோகேஷ் கனகராஜ் தற்போது நடிகராகவும் புதிய பயணத்தை தொடங்கியுள்ளார். அவர் முதன்முறையாக கதாநாயகனாக நடிக்கும் திரைப்படமான ‘டிசி (DC)’ தற்போது ரசிகர்களிடையே மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. சமீபத்தில் இப்படத்தின் அதிகாரப்பூர்வ டிரைலர் வெளியாகி சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. ‘டிசி’ திரைப்படத்தை பிரபல இயக்குநர் அருண் மாதேஸ்வரன் இயக்குகிறார்.
இந்த திரைப்படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் பிரம்மாண்டமாக தயாரித்து வருகிறது. அதிக பட்ஜெட்டில் உருவாகும் இப்படம் ஆக்ஷன், திரில்லர் மற்றும் உணர்ச்சி கலந்த கதையாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. லோகேஷ் கனகராஜின் ரசிகர்கள் மட்டுமின்றி, தமிழ் சினிமா ரசிகர்களிடமும் இப்படம் குறித்த எதிர்பார்ப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.
இப்படத்தில் லோகேஷ் கனகராஜுக்கு ஜோடியாக பிரபல நடிகை வாமிகா கப்பி முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இத்திரைப்படத்திற்கு இசையமைப்பாளராக அனிருத் ரவிச்சந்தர் பணியாற்றுகிறார். டிரைலரில் இடம்பெற்ற பின்னணி இசை மற்றும் ஆக்ஷன் காட்சிகள் ரசிகர்களை அதிகம் கவர்ந்துள்ளதாக சமூக வலைதளங்களில் கருத்துக்கள் பதிவாகி வருகின்றன.
இயக்குநராக வெற்றி கண்ட லோகேஷ் கனகராஜ், தற்போது நடிகராகவும் ரசிகர்களை கவரப்போகிறாரா என்ற ஆவல் ரசிகர்களிடையே அதிகரித்துள்ளது. ‘டிசி’ திரைப்படம் அவரது திரைப்பயணத்தில் முக்கிய மைல்கல்லாக அமையும் என திரையுலக வட்டாரங்கள் எதிர்பார்க்கின்றன.
இந்நிலையில் தற்போது லோகேஷ் கனகராஜ் முதலமைச்சர் விஜயை சந்தித்த புகைப்படங்கள் தற்போது இணையத்தில் டிரெண்டாகி வருவதால், லோகேஷ் கனகராஜ் மீண்டும் சமூக வலைதளங்களில் கவனத்தின் மையமாக மாறியுள்ளார்.
