Categories: Cinema News latest news

நான் இருக்க டென்ஷன்ல.. இவன் வேற என்னைய டார்ச்சர் பண்றானே!.. லியோ நடிகரால் கடுப்பான லோகேஷ் கனகராஜ்!..

லியோ பட இயக்குநர் லோகேஷ் கனகராஜுக்கு மிகவும் பிடித்த நடிகர் என்றால் மன்சூர் அலி கான் தான் எனக்கூறியுள்ளார். மேலும், கைதி படத்தில் ஹீரோவாக முதலில் நடிக்க வைக்க மன்சூர் அலி கான் தான் தனது மைண்டில் இருந்தார் என்றும் அப்போது அவர் நடிக்காத நிலையில் தான் அந்த படம் கார்த்திக்கு சென்றதாகவும் கூறியிருந்தார்.

விஜய் நடித்துள்ள லியோ படத்தில் தனக்கு பிடித்த நடிகர் மன்சூர் அலி கானையும் இணைத்துக் கொண்டார் லோகேஷ் கனகராஜ். இந்நிலையில், மன்சூர் அலி கான் நடித்துள்ள சரக்கு படத்தின் “ஆயி மகமாயி” பாடலை புரமோட் செய்யும் விதமாக லோகேஷ் கனகராஜை தனது குழுவுடன் அணுகி சால்வை எல்லாம் மன்சூர் அலி கான் போட்ட வீடியோ ஒன்று வைரலாகி வருகிறது.

இதையும் படிங்க: கோட்டை விட்ட இறைவன்!.. தட்டித் தூக்கிய வேட்டையன்!.. சந்திரமுகி 2 முதல் நாள் வசூல் இத்தனை கோடியா?..

அந்த வீடியோவில் லோகேஷ் கனகராஜ் முகத்தில் எந்தவொரு சிரிப்பும் இல்லாமல், அவர் மைண்ட் வாய்ஸ் வெளியே கேட்கும் விதமாக இருப்பதாக ட்ரோல்கள் அந்த வீடியோவுக்கு குவிந்து வருகின்றன.

லியோ படத்திற்கு பிரம்மாண்டமாக இசை வெளியீட்டு விழா நடைபெறும் என எதிர்பார்த்துக் கொண்டிருந்த லோகேஷ் கனகராஜ் திட்டமிட்டப்படி லியோ படம் திரைக்கு வருமா? என்கிற கவலையில் உள்ள நிலையில், தனது படத்தின் புரமோஷனை லோகேஷை வைத்து மன்சூர் அலி கான் செய்த நிலையில், தான் லோகேஷ் கனகராஜ் முகத்தில் சந்தோஷமே இல்லை என நெட்டிசன்கள் ஏகப்பட்ட கட்டுக்கதைகளை அவிழ்த்து விட்டு வருகின்றனர்.

இதையும் படிங்க: இதுவே ஒரு வாரத்துக்கு தாங்கும்!. நெட்டிசன்களின் தூக்கத்தை கெடுக்கும் ராய் லட்சுமி….

மேலும், நடிகர் விஜய்க்கும் லோகேஷ் கனகராஜுக்கும் இடையே சண்டை என்றும் லியோ படத்தின் ரிலீஸ் பணிகளையே லோகேஷ் கவனிக்கவில்லை என்றும் ரத்னகுமார் தான் பார்த்து வருவதாகவும் கூறுகின்றனர்.

Saranya M
Published by
Saranya M