அர்ஜுன் தாஸின் 'Con City'-யை பார்த்த லோகேஷ் கனகராஜ்... என்ன சொன்னார் தெரியுமா?

 
Arjun das con city lokesh kanagaraj

நடிகர் அர்ஜுன் தாஸுக்கு 'கைதி' படத்தில் மிரட்டலான வில்லன் ரோல் கொடுத்து அப்ளாஸ் வாங்க வைத்தவர் இயக்குநர் லோகேஷ் கனகராஜ் தான்.

அதன் பிறகு லோகேஷ் கனகராஜ் இயக்கிய 'தளபதி' விஜய்யின் 'மாஸ்டர்', 'உலக நாயகன்' கமல்ஹாசனின் 'விக்ரம்' ஆகிய படங்களிலும் அர்ஜுன் தாஸ் நடித்திருந்தார். இதையடுத்து 'அநீதி, ரசவாதி' போன்ற படங்களில் அர்ஜுன் தாஸ் ஹீரோவாக நடித்தார்.

இப்போது இவர் நடிப்பில் உருவாகியிருக்கும் புதிய படம் தான் 'கான் சிட்டி'. கடந்த ஜூன் 26-ஆம் தேதி ரிலீஸ் ஆன இந்த படத்தை அறிமுக இயக்குநர் ஹரிஷ் துரைராஜ் இயக்கியுள்ளார்.

இப்படம் ரசிகர்களிடையேவும், விமர்சன ரீதியாகவும் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. தற்போது, இந்த படத்தை இயக்குநர் லோகேஷ் கனகராஜ் பார்த்து ரசித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இது குறித்து அர்ஜுன் தாஸ் எக்ஸ் தளத்தில் "என்னோட பிரதர் லோகேஷ் கனகராஜ் 'கான் சிட்டி' படத்தை பார்த்தார். அவருக்கு ரொம்ப பிடிச்சிருக்குன்னு சொன்னார்.

என் படத்தை பார்க்க ஃபேமிலி ஆடியன்ஸ் தியேட்டருக்கு வருவதை நினைத்து சந்தோஷப்பட்டார். இது எல்லாவற்றையும் விட, நான் அவரை பெருமைப்படுத்தி விட்டதாக சொன்னார். எனக்கு திரையுலகில் பெரியதொரு வாய்ப்பை வழங்கிய அவர் இப்படி சொன்னது தான் சிறப்பான விஷயமாக நான் பார்க்கிறேன்" என்று பதிவிட்டுள்ளார்.

From Around the web