லோகேஷ் கனகராஜ் தயாரித்துள்ள 'மிஸ்டர் பாரத்'... எப்போது ரிலீஸ் தெரியுமா?
'பேஷன் ஸ்டுடியோஸ்' மற்றும் 'தி ரூட்' ஆகிய இரண்டு நிறுவனங்களுடன் சேர்ந்து பிரபல இயக்குநரும், நடிகருமான லோகேஷ் கனகராஜ் அவரது 'G Squad' நிறுவனம் மூலம் தயாரித்துள்ள புது படம் தான் 'மிஸ்டர் பாரத்'.
அறிமுக இயக்குநர் நிரஞ்சன் இயக்கியுள்ள இந்த படத்தில் கதாநாயகனாக பாரத் நடித்துள்ளார். பாரத்துக்கு ஜோடியாக சம்யுக்தா விஸ்வநாதன் டூயட் பாடி ஆடியுள்ளார்.
The wait is almost over.
— GSquad (@GSquadOffl) July 17, 2026
A fun-filled ride is all set to begin.#MrBhaarath releases worldwide from October 1 😀🥳
Release Date Promo : https://t.co/CWAYgSY309…@Bhaarath_Offl @samyukthavv @Niranjan_Dir @Dir_lokesh @Sudhans2017 @Jagadishbliss @PassionStudios @GSquadOffl…
மேலும், ஆதித்யா கதிர், நிதி பிரதீப், பால சரவணன், ஆர்.சுந்தர்ராஜன், சிபி சக்கரவர்த்தி முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளார்கள். இதற்கு பிரணவ் முனிராஜ் இசையமைத்திருக்கிறார்.
The wait is almost over.
— Passion Studios (@PassionStudios_) July 17, 2026
A fun-filled ride is all set to begin.#MrBhaarath releases worldwide from October 1 😀🥳
Release Date Promo : https://t.co/bmyR4FPvBK@Bhaarath_Offl @samyukthavv @Niranjan_Dir @Dir_lokesh @Sudhans2017 @Jagadishbliss @PassionStudios @GSquadOffl… pic.twitter.com/AWxzHtP80v
சமீபத்தில், இதன் இரண்டு பாடல்கள் ரிலீஸ் ஆகி இளசுகளிடம் வரவேற்பை பெற்றது. தற்போது, இந்த படத்தை வருகிற அக்டோபர் 1-ஆம் தேதி ரிலீஸ் செய்யத் திட்டமிட்டுள்ளதாக அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது.
