Categories: Cinema News latest news

நான் சொன்னா செய்வேன்.. ஆனால், அத மிஸ் பண்ணிட்டேன்.. அந்த வீடியோவை லீக் செய்த லோகேஷ்.!

உலகநாயகன் கமல்ஹாசன் நடித்து லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் இம்மாத தொடக்கத்தில் வெளியான விக்ரம் திரைப்படம் வெற்றி பற்றி நாம் சொல்லி தெரியவேண்டியதில்லை. படம் 25 நாட்கள் கடந்து 400 கோடி வசூலை ஈட்டி வருகிறது.

இந்த வாரம் பெரிய பெரிய படங்கள் ரிலீஸ் ஆனாலும், விக்ரம் ஆட்டம் குறைந்தபாடில்லை. இந்த படத்திற்காக கமல்ஹாசன் கடுமையாக உழைத்தார். கமல் பட ஷூட்டிங்கின் போது எந்த தலையீடும் செய்ததில்லை. என பல பேட்டிகளில் இயக்குனர் லோகேஷ் கூறிவந்துள்ளார்.

மேலும், படத்தின் இறுதி காட்சியில் ராட்சச துப்பாக்கி கொண்டு சுடும் போது கைகள் பெரிதாக தெரிய வேண்டும் என கூறியிருந்தேன். உடனே இருக்கும் 10 நிமிடத்திற்குள் வேக வேகமாக தண்டால் எடுத்து கையை பெரிது செய்து வந்து உடனே நடித்தார் என்றெல்லாம் கூறினார் லோகேஷ்.

இதையும் படியுங்களேன் – அஜித் செஞ்ச காரியத்துக்கு மனதார நன்றி சொன்னேன்..நெகிழ்ந்து போன ஹரி.! அது சம்பவம் இல்ல சரித்திரம்…

மேலும் அந்த வீடியோவை பட ரிலீசுக்கு பின்னர் வெளியிடுகிறேன் என கூறியிருந்தேன். அது போல்  தற்போது அந்த வீடியோவை வெளியிட்டுள்ளார் லோகேஷ். அதில் நான் சொன்னபடி செய்துவிட்டேன். இதில் கமல் சார் 26 முறை தண்டால் எடுத்தார். நான் முதல் இரண்டை மிஸ் செய்து விட்டேன். பிறகு தான் வீடியோ எடுத்தேன். என பதிவிட்டுள்ளார் லோகேஷ்.

68 வயதிலும், தன்னுடைய சினிமா காட்சி சரியாக வரவேண்டும் என கடுமையாக உழைக்கும் கமல்ஹாசனை பலரும் வியந்து பார்க்கின்றனர். இந்த வீடியோ வைரலாக பரவி வருகிறது.

 

Manikandan
Published by
Manikandan