விரைவில் சந்திப்போம்!... லோகேஷ் கனகராஜ் போட்ட டிவிட்.. தெறிக்கும் இணையதளம்...

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடித்து பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள திரைப்படம் மாஸ்டர். இப்படத்தை விஜய் ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர். இப்படம் பொங்கல் விருந்தாக ஜனவரி 13ம் தேதி வெளியாகிறது என செய்திகள் ஏற்கனவே வெளியாகி விஜய் ரசிகர்களுக்கு நிம்மதியை கொடுத்துள்ளது.
ஒருபக்கம், இப்படம் பொங்கலுக்கு ரிலீஸ் ஆகவில்லை. ஏப்ரல் 14ம் தேதிதான் வெளியாகிறது என்கிற செய்தி சினிமா உலகில் கசிந்து கொண்டிருக்கிறது. அதற்கு பின்னணியில் பல காரணங்கள் இருப்பதாக கூறப்படுகிறது.
இந்நிலையில், மாஸ்டர் படத்திற்கு தணிக்கையில் யூ/ஏ சான்றிதழ் கிடைத்துள்ளது. இந்த தகவலை டிவிட்டரில் பகிர்ந்துள்ள லோகேஷ் கனகராஜ் ‘விரைவில் சந்திப்போம்’ எனபதிவிட்டுள்ளார். எனவே, பொங்கலுக்கு படம் உறுதி என விஜய் ரசிகர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
See you soon 🤜🏻🤛🏻#MasterUAcertified pic.twitter.com/w0k2rA43hd
— Lokesh Kanagaraj (@Dir_Lokesh) December 24, 2020