கூடிய சீக்கிரம் அது நடந்துரும்.. அஜித் பற்றிய கேள்விக்கு லோகேஷின் அட்டகாசமான பதில்

by Rohini |
lokesh
X

lokesh

அஜித்: தமிழ் சினிமாவில் ஒரு மாபெரும் உச்சம் தொட்ட நடிகராக இருப்பவர் நடிகர் அஜித். ஆரம்பத்தில் பல கஷ்டங்களைக் கடந்து இன்று மக்கள் மனதில் ஒரு நீங்கா இடத்தை பிடித்திருக்கிறார். ஏகப்பட்ட போராட்டங்கள் வலிகள் இவைகளை கடந்து தான் கொண்ட இலட்சியத்தை அடைய எந்த எல்லைக்கும் போகக்கூடிய மனிதராக இருப்பவர் நடிகர் அஜித். தற்போது அஜித் கார் ரேஸில் கலந்து கொள்வதற்காக துபாய் சென்று இருக்கிறார்.

அஜித்தின் தன்னம்பிக்கை: அங்கு ரேஸ் சம்பந்தமான பயிற்சிகளை எடுத்து வருகிறார். நேற்று கூட தன்னுடைய காரில் பயிற்சி எடுத்துக் கொண்டிருந்தபோது திடீரென விபத்து ஏற்பட்டு நல்ல வேளையாக அவருக்கு அடியேதும் படாமல் கூலாக உள்ளே இருந்து வெளியே வருவதை வீடியோவில் பார்க்க முடிந்தது. அந்த அளவுக்கு ரேஸுக்காக எந்த இடையூறு வந்தாலும் அதில் முன்னேறி போய்க்கொண்டே இருக்க வேண்டும் என்பதற்கு அடையாளமாக இருப்பவர்.

லோகேஷின் ஆசை: இந்த நிலையில் துபாயில் நடந்த ஒரு பொங்கல் விழாவில் கலந்து கொண்ட லோகேஷ் கனகராஜிடம் அஜித் பற்றிய கேள்வி கேட்கப்பட்டது. அதாவது அஜித்தை எப்போது இயக்குவீர்கள் என்ற கேள்வி அவரிடம் கேட்கப்பட்டது. அதற்கு லோகேஷ் கனகராஜ் எல்லார் மாதிரியும் எனக்கும் ஏகே சாரோட ஒர்க் பண்ணனும்னு ஆசை இருக்கிறது. கூடிய சீக்கிரம் அது நடந்துரும்னு நினைக்கிறேன் என பதில் அளித்திருக்கிறார்.

கூடிய சீக்கிரம் நடக்கும்: இன்று தமிழ் சினிமாவில் உச்ச நடிகர்களாக இருக்கும் ரஜினி கமல் விஜய் இவர்களை வைத்து படங்களை இயக்கியவர் லோகேஷ். அதனால் அஜித்தை வைத்து எப்போது இயக்குவார் என்ற ஒரு கேள்வி அனைவர் மத்தியில் இருந்து வந்தது. அதற்கான பதிலை நேற்று நடந்த விழாவில் லோகேஷே கூறியிருக்கிறார். ஒருவேளை ரேஸ் எல்லாம் முடிந்து செப்டம்பர் மாதம் அஜித் திரும்பிய பிறகு இது பற்றிய பேச்சு வார்த்தை நடக்கலாம் என்ற ஒரு தகவல் கூட பதவி வருகிறது.

தற்போது அஜித் விடாமுயற்சி மற்றும் குட் பேட் அக்லி ஆகிய படங்களில் நடித்து முடித்துள்ளார். குட் பேட் அக்லி படம் ஏப்ரல் 10 ஆம் தேதி ரிலீஸ் என அறிவிக்கப்பட்டுள்ளது. விடாமுயற்சி படத்தின் ரிலீஸ் தேதி இன்னும் அறிவிக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Next Story