Lokesh: டீமுடன் லோகேஷ் கனகராஜ்!. அடுத்த படத்துக்கு ரெடி!.. வைரல் போட்டோ!...
மாநகரம் திரைப்படம் மூலம் இயக்குனராக அறிமுகமாகி கைதி படம் மூலம் கவனம் ஈர்த்தவர் லோகேஷ் கனகராஜ். ஒரே இரவில் நடக்கும் கதைக்கு அசத்தலாக திரைக்கதை அமைத்து ஆச்சரியப்பட வைத்தார் லோகேஷ். அதன்பின் விஜயை வைத்து மாஸ்டர், கமலை வைத்து விக்ரம், மீண்டும் விஜயை வைத்து லியோ, ரஜினியை வைத்து கூலி ஆகிய படங்களை இயக்கினார் லோகேஷ்.
மாஸ்டர், விக்ரம் போன்ற படங்கள் லோகேஷ் கனகராஜை கோலிவுட்டில் முன்னணி இயக்குனராக மாற்றியது. அதோடு கூலி படத்தை அவர் இயக்கிய போது அவருக்கு 50 கோடி சம்பளமும் கொடுக்கப்பட்டது. ஆனால் கூலி படம் எதிர்பார்த்த வசூலை பெறவில்லை. அடுத்து ரஜினி, கமல் இருவரையும் வைத்து அவர் ஒரு புதிய படத்தை இயக்கப் போவதாக செய்திகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது.
ஆனால் இயக்குனர் எனும் உறுதி செய்யப்படவில்லை என சொல்லி அதற்கு முற்றுப்புள்ளி வைத்தார் ரஜினி. கூலி படத்தின் ரிசல்ட் எதிர்பார்த்த அளவுக்கு இல்லை என்பதால் லோகேஷ் கனகராஜ் வேண்டாம் என ரஜினி முடிவெடுத்ததாக செய்திகள் வெளியானது. அதோடு அந்த படத்தை நெல்சன்தான் இயக்கப்போகிறார் எனவும் சொன்னார்கள்.
ஒருபக்கம் அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் ஒரு புதிய படத்தில் லோகேஷ் கனகராஜ் நடிக்க துவங்கினார். லோகேஷ் கனகராஜ் இயக்கும் படங்களை போலவே இந்த படத்திலும் ரத்தம் வலியும் வன்முறை காட்சிகள் இடம் பெற்றிருந்தது. டைட்டில் டீசர் வீடியோவையும் வெளியிட்டார்கள்.

ஒருபக்கம் லோகேஷ் கனகராஜ் அடுத்து யாரை வைத்து இயக்கப் போகிறார் என்கிற எதிர்பார்ப்பு ரசிகர்களிடம் இருக்கிறது. அநேகமாக அது கார்த்தியை வைத்து கைதி 2-வாக இருக்கலாம் என பலரும் எதிர்பார்க்கிறார்கள். இந்நிலையில் லோகேஷ் கனகராஜ் தனது உதவியாளர்கள் கேங்குடன் நின்று கொண்டிருக்கும் புகைப்படம் தற்போது சமூகவலைத்தளங்களில் வெளியாகிய வைரலாகி வருகிறது. இதை பலரும் பகிர்ந்து ‘கைதி 2 படத்தின் வேலையில் லோகேஷ் இறங்கிவிட்டார்’ என பதிவிட்டு வருகிறார்கள்.
