Categories: Cinema News latest news

சந்தானம் சொன்னதை கேட்கல!.. உடம்பு பூரா நோய்.. தீய நண்பர்கள் சகவாசம்.. லொள்ளு சபா ஆண்டனி உருக்கம்!..

லொள்ளு சபா சேஷு சமீபத்தில் உடல் நலக்குறைவு காரணமாக உயிரிழந்தது ரசிகர்களை சோகத்தில் ஆழ்த்தியது. நடிகர் சந்தானம் உள்ளிட்ட லொள்ளு சபா நிகழ்ச்சியில் நடித்த பிரபலங்கள் வந்து இரங்கல் தெரிவித்தனர். சமீபத்தில் லொள்ளு சபா நடிகர்களை அழைத்து 20வது வருட கொண்டாட்டம் ஒன்று நடைபெற்றது.

அதில், ஒரு சிலர் மட்டும் கலந்துக் கொள்ளவில்லை. அவர்கள் இப்போ என்ன செய்யுறாங்க என தேடி அலைந்த நிலையில், லொள்ளு சபா ஆண்டனி என்பவர் உடல் முழுக்க நோயுடன் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் தகவல் தெரிந்துள்ளது.

இதையும் படிங்க: இந்த கலர் பஞ்சுமிட்டாய்க்கு இன்னுமா தடை விதிக்கல!.. வனிதா விஜயகுமாரை கலாய்க்கும் ஃபேன்ஸ்!..

ஆஸ்துமா நோய் ஏற்பட்டு சிகிச்சை செய்வதற்காக மருத்துவமனைக்குச் சென்றிருக்கிறார் ஆண்டனி. அவருக்கு காலில் வெரிகோஸ் நோய் உள்ளதால் கால்கள் வீங்கி கிடக்கின்றன. நின்றுக் கொண்டே தான் தூங்கும் நிலைமை ஏற்பட்டது என்றும் படுத்து தூங்கினால் நெஞ்செல்லாம் அடைக்கிற மாதிரி இறுக்கமாக இருக்கும் என்றார்.

நின்றுக் கொண்டே தூங்கியதன் விளைவாக பிளாடர் வீங்கி விட்டதாக அவர் சொல்லும் போதே கேட்பவர்கள் கண்களில் கண்ணீர் பெருக்கெடுத்து ஓடும். அந்தளவுக்கு அவரது நிலைமை படுமோசமாக உள்ளது.

இதையும் படிங்க: கமலின் வாட்ச் தொலைந்ததால் உருவான நாயகன் படம்!.. இப்படி ஒரு பிளாஷ்பேக் இருக்கா!..

நல்லா சம்பாதித்து சினிமாவில் சாதிக்க நினைத்தவருக்கு தீய நண்பர்களின் சகவாசத்தால் பிசினஸ் எல்லாம் பண்ணி லாஸ் ஆன நிலையில், பல கெட்டப்பழக்கங்களுக்கு ஆளாகி இப்படி ஆகி விட்டேன் எனக் கூறியுள்ளார்.

நடிகர் சந்தானம் தான் தன்னை மருத்துவமனையில் சேர்த்து சிகிச்சைக்கான உதவிகளை செய்து வருகிறார் என்றும் அப்போதே ஆபிஸ் வா தேவையில்லாத நபர்களுடன் சேர வேண்டாம் என சந்தானம் எச்சரித்தார். ஆனால், நான் தான் கேட்கல என கண்ணீர் மல்க பேசுகிறார்.

இதையும் படிங்க: ரஜினியின் வாழ்க்கையில் நடந்த உண்மை சம்பவம் தான் அந்த படமா? ஓ அதான் அப்படி செஞ்சாரா?

லொள்ளு சபா ஆண்டனி இப்படி இருக்கும் சூழலில் அவரது மனைவி வந்து பார்க்கக் கூட இல்லை என்றும் இருவரும் பிரிந்து விட்டதாக கூறியுள்ளார். யாருக்கும் இதுபோன்ற நிலைமை வரக் கூடாது என்றும் கூடா நட்பு கேடு விளைவிக்கும் என்பதையும் லொள்ளு சபா அண்டனியின் துயரங்கள் மற்றவர்களுக்கு பாடமாக மாறியுள்ளது.

Saranya M
Published by
Saranya M